வலிமை படத்தின் பிரி-ரிலீஸ் நிகழ்வு... அஜித் பங்கேற்கிறாரா?

பெங்களூரு : நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை.

இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் -வினோத் மற்றும் போனிகபூர் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் சமூக விழிப்புணர்வை மையமாக கொண்டு வெளிவந்த நிலையில் தற்போது வலிமை படம் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்து வெளியாகவுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இந்தப் படம் கடந்த சில மாதங்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. கடந்த தீபாவளிக்கே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் கொரோனா மற்றும் அதையொட்டிய திரையரங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

24ம் தேதி ரிலீஸ்

24ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் வரும் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதையொட்டிய பிரமோஷன் பணிகளில் தயாரிப்புத் தரப்பு ஈடுபட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே தினந்தோறும் வலிமை திருவிழா என்னும்படியாக தொடர்ந்து பிரமோக்கள் உள்ளிட்டவை வெளியாகி வருகின்றன.

 பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி

வலிமை படம் அஜித்தின் பான் இந்தியா படங்களின் துவக்கமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி பெங்களூருவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பங்கேற்பு?

அஜித் பங்கேற்பு?

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களில் கலந்து கொள்ளாதவர் அஜித். ஆனால் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த படத்தின் பூஜை

அடுத்த படத்தின் பூஜை

இதனிடையே அஜித் -எச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி அடுத்ததாக அஜித் 61 படத்திலும் இணையவுள்ளது. இந்தப்படத்திற்கான பூஜை அடுத்த மாதத்தில் போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட உள்ளது. வலிமை போல இல்லாமல் படத்தை விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X