அஜீத்துக்கு ‘ஆபரேஷன்’: 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார்
சென்னை: 2 புதிய படங்களில் நடித்து முடித்ததும், நடிகர் அஜீத்குமார் காலில், 'ஆபரேஷன்' நடக்க இருக்கிறது. ஆபரேஷனுக்குப்பின் அவர் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க இருப்பதால், புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் தற்போது ஏற்றுக் கொள்ளவில்லை.
அஜீத்குமார் இப்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.அ அஜீத்-நயன்தாராவுடன் ஆர்யா, டாப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஹோலியில் ஜாலி...
ஒட்டுமொத்த திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் அஜித்தும்,நயன்தாராவும் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர் விஷ்ணுவர்தன் படத்திற்காக.

கண்ணில் பட்ட கண்...
யார் கண் அஜீத் மீது பட்டதோ தெரியவில்லை, கலர் பொடி கண்ணில் பட்டதால், அஜீத்திற்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டது.

கண்ணு போய் காலு...
அஜீத் வில்லன் ஆட்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது அஜீத் குதிப்பது போன்ற காட்சியில், ‘டூப்' போடாமல் அவரே நடித்தார்.அப்போது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது.

காலில் அடி
உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அஜீத்க்கு, காலில் கட்டுப்போட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

’பொறுமை’ கண் போன்றது...
காலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜீத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை-மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஆபரேசன் தான் ஒரே தீர்வு...
காலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமாக அஜீத் மீண்டும் டாக்டரிடம் சென்று பரிசோதித்தார். ‘ஆபரேஷன்' செய்தால்தான் வலி குறையும்'' என்று சொன்னார்களாம் டாக்டர்கள்.

கட்டாய ஓய்வு...
ஆபரேஷனுக்குப்பின் குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்களாம்.

எப்போ ஆபரேசன்?
உடனடியாக ‘ஆபரேஷன்' செய்து கொண்டால், பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், ‘ஆபரேஷன்' செய்து கொள்ள அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

அக்டோபர் 21–ந் தேதி...
அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னம் படம் மே மாதம் முடிவடைந்து விடும். அதற்கிடையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) அவர் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் படம் தொடங்க இருக்கிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும்.அக்டோபர் 21-ந் தேதி, அஜீத் ‘ஆபரேஷன்' செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார்.

4 மாதங்கள் கட்டாய ஓய்வு...
அதன்பிறகு அஜீத் 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார்.‘ஆபரேஷன்' நடைபெற இருப்பதாலும், அதன்பிறகு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதாலும், அஜீத் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











