Actor Ajith: மீண்டும் அசர்பைஜானுக்கு படையெடுக்கும் விடாமுயற்சி டீம்.. எப்பதாங்க சூட்டிங் முடிப்பீங்க

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து சில மாதங்கள் நடந்த நிலையில் அங்கு நிலவிய மோசமான காலச்சூழல் காரணமாக படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கடந்த மாதத்தில் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இதனிடையே அடுத்த கட்டமாக வேறு லொகேஷன்களில் படத்தின் ஷூட்டிங்கை நடத்தவும் திட்டமிட்டனர். ஆனால் பல்வே’று காரணங்களால் தொடர்ந்து ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழுவின திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்திற்காக அஜித் இணையுள்ள நிலையில் விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவு செய்ய தயாரிப்பு தரப்பும் திட்டமிட்டு செயல்பட்டு செயல்பட்டு வருகிறது. அசர்பைஜான் சூட்டிங்கிற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajiths Vidaa Muyarchi movie team planned again shooting in Azerbaijan

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் ரிலீசானது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்திலேயே விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. விடாமுயற்சி படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனரை லைக்கா நிறுவனம் உறுதி செய்திருந்தது. ஆயினும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த படத்தின் சூட்டின் துவங்கப்பட்டது.

அசர்பைஜான் சூட்டிங்: அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகளை அசர்பைஜானின் மகிழ் திருமேனி நடத்தி முடித்துள்ளார். தொடர்ந்து ஒரே கட்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு அசர்பைஜானின் காலச்சூழலும் காரணமாக அமைந்தது. அங்கு தொடர்ந்து பனிமழை பொழிந்த காரணத்தால் அங்கிருந்து படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

மீண்டும் அசர்பைஜானில் சூட்டிங்?: அஜித் துபாய் சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது. ஆனால் முன்னதாக கொடுத்த டேட்ஸ் காரணமாக மீண்டும் இந்த படத்திற்கான கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் சிக்கிக்கொண்டனர். அதனால் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமானது. இந்நிலையில் தற்போது அசர்பைஜானில் நிலைமை சீராகியுள்ளதால் மீண்டும் அங்கேயே படத்தின் ஷூட்டிங்கை துவங்கலாமா என்று படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏகே63 படம்: அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் மார்ச் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஏகே63 படத்தின் சூட்டிங்கை துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை ஏறக்குறைய நிறைவு செய்துவிட்டு டீம் காத்திருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்தின் தாமதத்தால் நடிகர்களின் கால்ஷீட் உள்ளிட்டவற்றிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X