அஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா?

By Siva

Recommended Video

அஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா?- வீடியோ

சென்னை: அஜித், விஜய், சூர்யா, ரஜினி ஆகியோர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்கார் படத்தில் நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

சூர்யாவோ செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அஜித்

அஜித்

விஸ்வாசம் படத்தை முடித்த பிறகு அஜித் வினோத் இயக்கத்தில் நடிக்கிறாராம். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோதுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜித் கடந்த 4 ஆண்டுகளாக சிவா இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் தான் வேறு இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளார்.

அட்லி

அட்லி

சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. முன்னதாக தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய், அட்லி ஒன்றாக பணியாற்றியுள்ளனர். சிவா எப்படி அஜித்தை மட்டுமே வைத்து படம் எடுத்து வருகிறாரோ, அதே போன்று அட்லி விஜய்யை வைத்து வரிசையாக படம் எடுக்கிறார். அட்லி இயக்கியுள்ள மூன்று படங்களில் முதல் படத்தை தவிர மற்ற இரண்டு படங்களின் ஹீரோ விஜய் தான்.

சுதா கொங்கரா

சுதா கொங்கரா

சூர்யாவின் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. அவர் தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் மோகன்லால், போமன் இரானி, ஆர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இதையடுத்து இறுதிச்சுற்று படம் புகழ் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எஸ். ரவிக்குமார்

கே.எஸ். ரவிக்குமார்

அரசியல் வேலைகள் ஒரு பக்கம் நடக்க ரஜினியோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். காலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. முன்னதாக முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X