பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயிலில் பிரார்த்தனை செய்த அஜீத்!
தன் பிறந்த நாளன்று ஷிர்டி சாய்பாபா கோயில் வழிபாடு நடத்தி, பிரார்த்தனை செய்துள்ளார் அஜீத்.
வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் புதுப் படத்தில் நடிக்கிறார் அஜீத். அதன் படப்பிடிப்பு ஆரம்பமாக நடந்து வருகிறது.

இந்தப் படப்பிடிப்புக்காக புனே சென்ற போதுதான் அவர் பிறந்த நாளும் வந்தது. அன்றைக்கு அஜீத் ஷிர்டி சாய்பாபா கோவிலுக்குப் வழிபாடு நடத்தியுள்ளார்.
நீண்ட நேரம் கோவிலில் உட்கார்ந்திருந்த அவர், சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.
அஜீத்தின் ஆரம்பம் படத்தைத் தயாரித்தவரும், இப்போது நடிக்கும் புதுப்படத்தை தயாரிப்பவருமான ஏ.எம்.ரத்னம் சென்னை சாலிகிராமத்தில் சாய்பாபா கோவில் கட்டியுள்ளார்.
அஜீத்தின் இரு படங்களின் பூஜைகளும் இந்த கோயிலில்தான் நடந்தன என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











