விடாமுயற்சி படம் பார்த்த அஜித்?.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?.. ஏகே ஃபேன்ஸுக்கு ஹேப்பிதான்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தை அஜித் பார்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த ஷெட்யூல் முடிந்தது. அதனை சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் சென்னை திரும்பியிருக்கும் படக்குழு இன்னும் சில காட்சிகளை சென்னையில் வைத்தோ அல்லது வேறு மாநிலத்தில் வைத்டோ படமாக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அடுத்தடுத்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி குட் ரெஸ்பான்ஸை பெற்றன.
படம் பார்த்த அஜித்: இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகளை அஜித் பார்த்துவிட்டு, படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது என்று மகிழ் திருமேனியை பாராட்டி; என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டதாக அஜித் சொன்னார் என கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











