அரசியலுக்கு வருவாரா அஜித்?.. சார் அவரோட பிளானே அதுதான்.. வையாபுரி ஓபன் டாக்

சென்னை: எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார் நடிகர் விஜய். அவர் சி.எம்மாக பதவியேற்றது திரை கலைஞர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விஜய், அஜித் ஆகியோருடன் பல படங்களில் சேர்ந்து நடித்த கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான வையாபுரி அஜித் குறித்து பேசியிருக்கும் விஷயம் ஏகே ரசிகர்களிடம் வைரலாகியிருக்கிறது.

தமிழ்நாட்டை இதுவரை எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையிலிருந்து வந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் மாதிரியெல்லாம் இவரெல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றுதான் எல்லோருமே கணித்தார்கள். ஆனால் அவரது கட்சியோ அசால்ட்டகா 108 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாகி மெர்சல் செய்தது. அதனையடுத்து மற்ற கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார் விஜய்.

Ajith Will Never Enter Politics Vaiyapuri Explains Why
Photo Credit:

எழும் கடும் விமர்சனங்கள்: முதலமைச்சராக பதவியேற்ற முதல் சில நாட்களில் அவரது செயல்பாடு ஒவ்வொன்றும் கவனத்தையும் ஈர்த்தது. தவெகவை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாம்; தமிழ்நாட்டை அடியோடு மாற்ற வந்த தூதுவன் ரேஞ்சுக்கு விஜய்யை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை விரித்தாட தொடங்கிவிட்டது. இதன் காரணமாக விமர்சன வளையத்துக்குள் வந்திருக்கிறார் விஜய். போதாக்குறைக்கு அவரது அமைச்சர்களின் செயல்பாடுகள், மாற்று கட்சி எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது என ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துவிடுகிறது.

Also Read
திரிஷ்யம் 3: 5 நாளில் 156 கோடி வசூல்.. ஜார்ஜ்குட்டியின் இந்த அதிரடி ஆட்டத்தை யாராலும் தடுக்க முடியல!
திரிஷ்யம் 3: 5 நாளில் 156 கோடி வசூல்.. ஜார்ஜ்குட்டியின் இந்த அதிரடி ஆட்டத்தை யாராலும் தடுக்க முடியல!

அஜித்தின் நிலைமை: இதற்கிடையே விஜய் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார். எனவே அவரது இடத்தை சினிமாவில் யார் பிடிப்பார் என்ற கேள்வியும் அனைவரிடமும் இருக்கிறது. சமீபத்தில்கூட கருப்பு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஜய் சென்றதால் சினிமாவில் வெற்றிடம் இல்லை' என ஓபனாக பேசியிருந்தார். விஜய் இல்லாத இடத்தை அஜித்தான் நிரப்ப வேண்டும் என்பது ஏகே ரசிகர்களின் தீராத ஆசையாக இருக்கிறது. அவரோ கார் ரேஸில் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்.

அடுத்த படம்: அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அநேகமாக அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் தெரிகிறது. இப்படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய், அஜித்துடன் பல படங்களில் நடித்த வையாபுரி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார் அஜித்.

அந்த ஷூட்டிங்கில்: அவரது கவனம் முழுக்க கார் ரேஸில் இருக்கிறது. ராஜா படத்தில் அவருடன் நான் சேர்ந்து நடித்தேன். அப்போது குட்டியாக ஒரு விமானத்தை செய்துகொண்டு அவரும், கேமரா மேனும் ஆளே இல்லாத காட்டுக்குள் போய்விடுவார்கள். அதைத்தான் ஆபரேட் செய்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாளாவது பைலட்டாகிவிட வேண்டும் என்பது அவரது ஆசை. பிறகு கார் ரேஸுக்கும் சென்றுவிட்டார். அவருக்கு இன்னொரு இடத்தில் விருப்பம் இருக்கிறது. எனவே இங்கே வரமாட்டார். குடும்பத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அவர் எப்படி இங்கே வருவார். அவர் எதை செய்தாலும் அதில் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X