ஹீரோ .. ஹீரோ ..
இதுவரை நடித்து அசத்திய அஜீத் அடுத்து பாடி ரசிகர்களை குஷிப்படுத்தப் போறாராம்.
அமராவதியில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான அட்டாகசம் வரை பல அதிரடி, காதல் படங்களில் நடித்துள்ள அஜீத் சிலஆண்டுகள் வரை முன்னணி நடிகராக இருந்து வந்தார்.
இப்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல நடிகர்கள் அஜீத்தை ஓவர் டேக் செய்து எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடுப்படைந்து போன அஜீத், அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான், நானே தான் என்று தனக்குத்தானே அவ்வப்போது கூறிவருகிறார்.
அட்டகாசம் படத்தை அடுத்து ஜி படத்தில் மும்முரமாகியிருக்கிறார் அஜீத். த்ரிஷாதான் ஹீரோயின் என்பது தெரிந்த செய்தி.படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக திட்டம். மொத்தம் 130 நாட்கள் படத்தை படமாக்கியுள்ளார்கள்.
படத்தின் முதல் காட்சியிலேயே லேசான தாடியுடன் அஜீத் சிறைச்சாலையை விட்டு வெளியே வருவது போல் அமைத்துள்ளார்கள்.ஏன் சிறைக்குப் போனார்? என்ன நேர்ந்தது என்பதை பிளாஸ்பேக்கில் சொல்கிறார்கள்.
படம் எப்படி வந்திருக்கிறது என்று இயக்குநர் லிங்குசாமியிடம் கேட்டபோது,
அஜீத்துக்கு இருக்கிற பெர்ஸனாலிட்டிக்கு அவர் நடிக்க வேண்டிய படங்களே வேற. காதல் கோட்டை போன்று 100 படங்களில்நடித்தாலும் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டாது. ஆனால் அமர்க்களம் படம் அவரது பாதையை மாற்றி விட்டது.
வாலி படத்திற்குப் பிறகு நடிப்புத் திறமையை காட்ட அஜீத்திற்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும்பின்னியிருக்கிறார் என்று கூறினார்.
இந்தப் படத்தையடுத்து அஜீத், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் 3 வேடங்களில் காட்பாதர் என்ற படம் பண்ணவுள்ளார்.அஜீத்துக்கு ஜோடியாக ஆஷின் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் ஒரு விஷேம் என்னவென்றால் இதுவரை நடிக்கமட்டுமே செய்த அஜீத், இப்படத்தில் ஒரு பாட்டு இருக்கிறார்.
தனது குரல் சுமாராக இருந்தாலும் அதை ரஹ்மான் இசையில் ஈடுகட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் அஜீத் உள்ளார். மேலும்எல்லா நடிகர்களும் தங்களது சொந்தக் குரலில் பாடி ரசிகர்களை மகிழ்விப்பது போல, அஜீத்தும் தனது ரசிகர்களைகுஷிப்படுத்தவிருக்கிறாராம்.
இதைக் கேட்டதிலிருந்து ரசிகர்கள் எல்லோரும் கிலியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











