»   »  அஜீத், தனுஷ், பரத்... முன்னொரு காலத்தில் ஒரே படத்தில் பல முன்னணி நாயகர்கள் சேர்ந்து நடித்துக் கலக்குவார்கள். எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோர்இணைந்து நடித்துள்ளனர்.அதேபோல சிவாஜியும், ஜெமினியும் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளனர். சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஏவி.எம்.ராஜன்,எஸ்எஸ்ஆர் என அந்தக் கால முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளார்கள்.அவர்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லாததால் அது சாத்தியமாயிற்று. மேலும் அப்போதெல்லாம் கதை தான் ஹீரோ.அதற்குப் பிறகு வந்த ரஜினி, கமலும் கூட பல படங்களில் இணைந்து கலக்கியுள்ளனர். அவர்களது காலகட்டத்தில் முன்னணிஹீரோக்களாக இருந்த விஜயக்குமார் போன்றோருடனும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால், பின்னால் கதையை விட ஹீரோவே முக்கியம் என்ற கேடுகெட்ட நிலை வந்தது. இதனால் ஹீரோவை வைத்து படம் என்றுஎடுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஹீரோ சேருவது சாத்தியமின்றிப் போனது.ஆனாலும் மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டர்கள் மனது வைத்ததால் பிரபு, கார்த்திக் ஆகிய முன்னணி ஹீரோக்கள் கரம்கோர்த்து அக்னி நட்சத்திரம் தந்தார்கள். ஆனால் அதைப் போல நிறைய படங்கள் வரவில்லை.விஜய், சூர்யா சேர்ந்து சில படங்களில் நடித்தார்கள். அப்போது சூர்யா சின்ன நடிகர் என்பதால் அது சாத்தியமாயிற்று.இந் நிலையில் மூன்று ஹீரோக்களைப் போட்டு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். தம்பி தனுஷை வைத்துபுதுப்பேட்டையை செதுக்கி வரும் செல்வராகவன் அடுத்து வெங்கடேஷ் நடிக்க தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதையடுத்து கஜினி புகழ் சேலம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் புதிய தமிழ்ப் படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில்நடிக்கப் போகிறவர் இளைய தளபதி விஜய். இப்படத்தை முடித்து விட்டு மேலும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குகிறார்.அந்தப் படத்தில் ஒரு விசேஷம் உள்ளது. முன்னணி ஹீரோக்களான அஜீத், தனுஷ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் பரத் ஆகியோர்இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை தயாரிப்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.புதுப்பேட்டைக்கு வருவோம். இப்படத்தில் தனது ஆஸ்தான நாயகி சோனியா அகர்வாலுக்கு மிகச் சிறிய வேடமேகொடுத்திருந்தார் செல்வா. இதனால் கோபித்துக் கொண்டார் சோனியா. அவர்களது காதலே முடிவுக்கு வந்து விட்டதாகவும்கூறினார்கள்.ஆனால் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கோபம், ஓடிப் போய் மீண்டும் காதலில் மூழ்கி விட்டார்களாம் இருவரும்.காதல் என்றால் ஊடல் இல்லாமலா...

அஜீத், தனுஷ், பரத்... முன்னொரு காலத்தில் ஒரே படத்தில் பல முன்னணி நாயகர்கள் சேர்ந்து நடித்துக் கலக்குவார்கள். எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோர்இணைந்து நடித்துள்ளனர்.அதேபோல சிவாஜியும், ஜெமினியும் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளனர். சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஏவி.எம்.ராஜன்,எஸ்எஸ்ஆர் என அந்தக் கால முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளார்கள்.அவர்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லாததால் அது சாத்தியமாயிற்று. மேலும் அப்போதெல்லாம் கதை தான் ஹீரோ.அதற்குப் பிறகு வந்த ரஜினி, கமலும் கூட பல படங்களில் இணைந்து கலக்கியுள்ளனர். அவர்களது காலகட்டத்தில் முன்னணிஹீரோக்களாக இருந்த விஜயக்குமார் போன்றோருடனும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால், பின்னால் கதையை விட ஹீரோவே முக்கியம் என்ற கேடுகெட்ட நிலை வந்தது. இதனால் ஹீரோவை வைத்து படம் என்றுஎடுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஹீரோ சேருவது சாத்தியமின்றிப் போனது.ஆனாலும் மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டர்கள் மனது வைத்ததால் பிரபு, கார்த்திக் ஆகிய முன்னணி ஹீரோக்கள் கரம்கோர்த்து அக்னி நட்சத்திரம் தந்தார்கள். ஆனால் அதைப் போல நிறைய படங்கள் வரவில்லை.விஜய், சூர்யா சேர்ந்து சில படங்களில் நடித்தார்கள். அப்போது சூர்யா சின்ன நடிகர் என்பதால் அது சாத்தியமாயிற்று.இந் நிலையில் மூன்று ஹீரோக்களைப் போட்டு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். தம்பி தனுஷை வைத்துபுதுப்பேட்டையை செதுக்கி வரும் செல்வராகவன் அடுத்து வெங்கடேஷ் நடிக்க தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதையடுத்து கஜினி புகழ் சேலம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் புதிய தமிழ்ப் படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில்நடிக்கப் போகிறவர் இளைய தளபதி விஜய். இப்படத்தை முடித்து விட்டு மேலும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குகிறார்.அந்தப் படத்தில் ஒரு விசேஷம் உள்ளது. முன்னணி ஹீரோக்களான அஜீத், தனுஷ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் பரத் ஆகியோர்இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை தயாரிப்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.புதுப்பேட்டைக்கு வருவோம். இப்படத்தில் தனது ஆஸ்தான நாயகி சோனியா அகர்வாலுக்கு மிகச் சிறிய வேடமேகொடுத்திருந்தார் செல்வா. இதனால் கோபித்துக் கொண்டார் சோனியா. அவர்களது காதலே முடிவுக்கு வந்து விட்டதாகவும்கூறினார்கள்.ஆனால் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கோபம், ஓடிப் போய் மீண்டும் காதலில் மூழ்கி விட்டார்களாம் இருவரும்.காதல் என்றால் ஊடல் இல்லாமலா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னொரு காலத்தில் ஒரே படத்தில் பல முன்னணி நாயகர்கள் சேர்ந்து நடித்துக் கலக்குவார்கள். எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோர்இணைந்து நடித்துள்ளனர்.

அதேபோல சிவாஜியும், ஜெமினியும் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளனர். சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஏவி.எம்.ராஜன்,எஸ்எஸ்ஆர் என அந்தக் கால முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து பல படங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அவர்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லாததால் அது சாத்தியமாயிற்று. மேலும் அப்போதெல்லாம் கதை தான் ஹீரோ.

அதற்குப் பிறகு வந்த ரஜினி, கமலும் கூட பல படங்களில் இணைந்து கலக்கியுள்ளனர். அவர்களது காலகட்டத்தில் முன்னணிஹீரோக்களாக இருந்த விஜயக்குமார் போன்றோருடனும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.


ஆனால், பின்னால் கதையை விட ஹீரோவே முக்கியம் என்ற கேடுகெட்ட நிலை வந்தது. இதனால் ஹீரோவை வைத்து படம் என்றுஎடுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஹீரோ சேருவது சாத்தியமின்றிப் போனது.

ஆனாலும் மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டர்கள் மனது வைத்ததால் பிரபு, கார்த்திக் ஆகிய முன்னணி ஹீரோக்கள் கரம்கோர்த்து அக்னி நட்சத்திரம் தந்தார்கள். ஆனால் அதைப் போல நிறைய படங்கள் வரவில்லை.

விஜய், சூர்யா சேர்ந்து சில படங்களில் நடித்தார்கள். அப்போது சூர்யா சின்ன நடிகர் என்பதால் அது சாத்தியமாயிற்று.

இந் நிலையில் மூன்று ஹீரோக்களைப் போட்டு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். தம்பி தனுஷை வைத்துபுதுப்பேட்டையை செதுக்கி வரும் செல்வராகவன் அடுத்து வெங்கடேஷ் நடிக்க தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.


இதையடுத்து கஜினி புகழ் சேலம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் புதிய தமிழ்ப் படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில்நடிக்கப் போகிறவர் இளைய தளபதி விஜய். இப்படத்தை முடித்து விட்டு மேலும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குகிறார்.

அந்தப் படத்தில் ஒரு விசேஷம் உள்ளது. முன்னணி ஹீரோக்களான அஜீத், தனுஷ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் பரத் ஆகியோர்இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை தயாரிப்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

புதுப்பேட்டைக்கு வருவோம். இப்படத்தில் தனது ஆஸ்தான நாயகி சோனியா அகர்வாலுக்கு மிகச் சிறிய வேடமேகொடுத்திருந்தார் செல்வா. இதனால் கோபித்துக் கொண்டார் சோனியா. அவர்களது காதலே முடிவுக்கு வந்து விட்டதாகவும்கூறினார்கள்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கோபம், ஓடிப் போய் மீண்டும் காதலில் மூழ்கி விட்டார்களாம் இருவரும்.

காதல் என்றால் ஊடல் இல்லாமலா...


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil