ஹீரோ .. ஹீரோ ..
சென்னையில் வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கும் தேசிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார்.
"வில்லன்" படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அஜித் மிகவும் மகிழ்ச்சியுடன்ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஓய்வையும் உருப்படியாகப் போக்குவதற்காக தனக்குப் பிடித்தமான கார் பந்தயத்தில் மீண்டும் கலந்துகொள்ள அஜித் முடிவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் நடந்த தேசிய கார் பந்தயத்தின் 3வது சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டார் அஜித்.
அப்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் மயிரிழையில் காயமின்றி உயிர் தப்பினார். வேறு சிலருக்குப்படுகாயங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் தேசிய கார் பந்தயத்தின் 4வது சுற்று வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்கவுள்ளது.
கடந்த 3வது சுற்றுப் போட்டியில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இனி அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அவருடைய மனைவி நடிகை ஷாலினியும், மற்றும் பல திரையுலகினரும்வற்புறுத்தினர்.
ஆனால் அஜித் பிடிவாதமாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டே தீருவேன் என்று கூறி அதற்கான பயிற்சியிலும்தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











