அஜீத்தை மிரட்டினாரா பாலா? நான் கடவுள் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் கேட்டுஅஜீத்தை மிரட்டியதாக இயக்குநர் பாலா மீது அஜீத் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.பாலா வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கிளம்பிய அவர்களை அஜீத்அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தார். பாலாவின் இயக்கத்தில் உருவாகும் நான் கடவுள் படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாகஇருந்தது. ஆனால் பாலா அதிக அவகாசம் எடுத்துக் கொண்டதால் படத்திலிருந்து அஜீத் விலகிக்கொண்டார். இருவரும் சுமூகமாகவும், நட்பாகவும் விலகிக் கொண்டதாககூறப்பட்டது.ஆனால் திரைமறைவில் பெரிய அக்கப்போர் நடந்துள்ளதாக இப்போது செய்திகள்கசிய ஆரம்பித்துள்ளன. நான் கடவுள் படம் தாமதமாகவே பி.வாசுவின் இயக்கத்தில்பரமசிவனில் நடிக்கப் போனார் அஜீத்.அப்படம் முடிந்தவுடன், நான் கடவுளுக்காக பாலாவிடம் போயுள்ளார். படம் லேட்ஆகும் போல இருக்கிறது. வேண்டுமானால் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில்நடியுங்கள், அதற்குள் நான் கடவுள் கதை ரெடியாகி விடும் என்று பாலா கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத அஜீத், உங்களது படத்தில் நடிப்பதாக மட்டுமேகூறியிருக்கிறேன். எனவே நான் கடவுள் கதை எப்போது ரெடி ஆகிறதோ, அப்போதுசொல்லுங்கள் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறி விட்டு திருப்பதியில் நடிக்கப்போய் விட்டார் அஜீத்.இந்தப் படம் முடிந்ததும் மறுபடியும் பாலாவை அணுகியுள்ளார். அப்போதும் கதைரெடியாகவில்லை என்று பாலா கூறவே, அதிருப்தி அடைந்த அஜீத், சரி, நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறி விட்டார். இதை பாலாவும் ஏற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து படத்திற்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தருமாறுதயாரஹிப்பாளர் தேனப்பன் பாலா மூலம் அஜீத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அஜீத்தும்ஒத்துக் கொண்டார். ஆனால் வட்டியோடு பணத்தைத் திரும்பத் தருமாறு தேனப்பன் கூற அதை பாலாவும்அஜீத்திடம் கூறியுள்ளார். வழக்கமாக வட்டியுடன் யாரும் பணத்தைத் தர மாட்டார்கள்.இருந்தாலும் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக அஜீத் சரி என்று ஒத்துக் கொண்டார்.இதையடுத்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலா, தேனப்பன், அஜீத், திரைப்படவிநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் சிலர் சந்தித்தனர். அந்தசந்திப்பின்போது அஜீத் குறித்து காரசாரமான விவாதம் நடந்துள்ளது.அப்போது ஒருவர் அஜீத்தை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால்அதிர்ந்து போன அஜீத், எதுவும் பேசாமல் பணத்தை பாலாவிடம் கொடுத்து விட்டுஅங்கிருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவத்தை பாலாவும் கூட எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.இச்சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதால் அஜீத் ரசிகர்கள்கொந்தளிப்படைந்துள்ளனர். பாலாவை கண்டித்து சென்னையின் சில இடங்களில்போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலிகிராமத்தில் உள்ள பாலாவின் வீட்டுக்கு முன்புஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதை அறிந்த அஜீத், உடனடியாக அவர்களுடன் தொடர்பு கொண்டு யாரும்பிரச்சினை செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று சமாதானப்படுத்திஅடக்கியுள்ளார். தலை சொல்லி விட்டதால் ரசிர்களும் பொறுமை காத்தனர்.இருந்தாலும் அஜீத் ரசிகர் மன்ற அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலாவின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். ஆனால் போலீஸார்அவர்களைத் தடுத்து கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துபாலாவின் வீடு, அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அஜீத்தை பாலா மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம்தலையிடாமல் மெளனம் சாதிப்பதையும் ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.

By Staff

நான் கடவுள் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் கேட்டுஅஜீத்தை மிரட்டியதாக இயக்குநர் பாலா மீது அஜீத் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

பாலா வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கிளம்பிய அவர்களை அஜீத்அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.

பாலாவின் இயக்கத்தில் உருவாகும் நான் கடவுள் படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாகஇருந்தது.


ஆனால் பாலா அதிக அவகாசம் எடுத்துக் கொண்டதால் படத்திலிருந்து அஜீத் விலகிக்கொண்டார். இருவரும் சுமூகமாகவும், நட்பாகவும் விலகிக் கொண்டதாககூறப்பட்டது.

ஆனால் திரைமறைவில் பெரிய அக்கப்போர் நடந்துள்ளதாக இப்போது செய்திகள்கசிய ஆரம்பித்துள்ளன. நான் கடவுள் படம் தாமதமாகவே பி.வாசுவின் இயக்கத்தில்பரமசிவனில் நடிக்கப் போனார் அஜீத்.

அப்படம் முடிந்தவுடன், நான் கடவுளுக்காக பாலாவிடம் போயுள்ளார். படம் லேட்ஆகும் போல இருக்கிறது. வேண்டுமானால் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில்நடியுங்கள், அதற்குள் நான் கடவுள் கதை ரெடியாகி விடும் என்று பாலா கூறியுள்ளார்.


இதற்கு சம்மதிக்காத அஜீத், உங்களது படத்தில் நடிப்பதாக மட்டுமேகூறியிருக்கிறேன். எனவே நான் கடவுள் கதை எப்போது ரெடி ஆகிறதோ, அப்போதுசொல்லுங்கள் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறி விட்டு திருப்பதியில் நடிக்கப்போய் விட்டார் அஜீத்.

இந்தப் படம் முடிந்ததும் மறுபடியும் பாலாவை அணுகியுள்ளார். அப்போதும் கதைரெடியாகவில்லை என்று பாலா கூறவே, அதிருப்தி அடைந்த அஜீத், சரி, நான் விலகிக்கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

இதை பாலாவும் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து படத்திற்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தருமாறுதயாரஹிப்பாளர் தேனப்பன் பாலா மூலம் அஜீத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அஜீத்தும்ஒத்துக் கொண்டார்.


ஆனால் வட்டியோடு பணத்தைத் திரும்பத் தருமாறு தேனப்பன் கூற அதை பாலாவும்அஜீத்திடம் கூறியுள்ளார். வழக்கமாக வட்டியுடன் யாரும் பணத்தைத் தர மாட்டார்கள்.இருந்தாலும் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக அஜீத் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலா, தேனப்பன், அஜீத், திரைப்படவிநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் சிலர் சந்தித்தனர். அந்தசந்திப்பின்போது அஜீத் குறித்து காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

அப்போது ஒருவர் அஜீத்தை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால்அதிர்ந்து போன அஜீத், எதுவும் பேசாமல் பணத்தை பாலாவிடம் கொடுத்து விட்டுஅங்கிருந்து வெளியேறி விட்டார்.


இந்த சம்பவத்தை பாலாவும் கூட எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதால் அஜீத் ரசிகர்கள்கொந்தளிப்படைந்துள்ளனர். பாலாவை கண்டித்து சென்னையின் சில இடங்களில்போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலிகிராமத்தில் உள்ள பாலாவின் வீட்டுக்கு முன்புஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதை அறிந்த அஜீத், உடனடியாக அவர்களுடன் தொடர்பு கொண்டு யாரும்பிரச்சினை செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று சமாதானப்படுத்திஅடக்கியுள்ளார். தலை சொல்லி விட்டதால் ரசிர்களும் பொறுமை காத்தனர்.இருந்தாலும் அஜீத் ரசிகர் மன்ற அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பாலாவின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். ஆனால் போலீஸார்அவர்களைத் தடுத்து கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துபாலாவின் வீடு, அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஜீத்தை பாலா மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம்தலையிடாமல் மெளனம் சாதிப்பதையும் ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X