ஹீரோ .. ஹீரோ ..
கார்ப் பந்தயங்களில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்திற்கு நடிகர் அஜீத் பெருமை சேர்த்து வருவதாக நடிகர்பிரசாந்த் பாராட்டினார்.
இளம் நடிகர்கள் ஒருவரை ஒருவர் பராட்டிக் கொள்வது என்பது மிக அபூர்வமான விஷயம்.
அஜீத் இப்போது நடிப்பை விட கார்ப் பந்தயங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மலேசியாவில் உள்ளசேபாங் நகரில் 29ம் தேதி பிரமாண்டமான கார்ப் பந்தயம் நடக்கிறது. இதில் அஜீத் கலந்து கொள்கிறார்.
அஜீத்தின் கார்ப் பந்தய ஆர்வத்தைப் பாராட்டியுள்ள நடிகர் பிரசாந்த்,
இதன் மூலம் தமிழகத்திற்கும்சினிமாகாரர்களுக்கும் அவர் பெருமை சேர்ப்பதாகக் கூறியுள்ளார்.
பிரசாந்த்தும் நேற்று மலேசியா கிளம்பிச் சென்றார். அங்கு அஜீத்தை நேரில் சந்தித்து வாழ்த்தப் போவதாகவும்பிரசாந்த் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெறும் பரத நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக பிரசாந்த்கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











