»   »  ஆழ்வார் பஞ்ச்!

ஆழ்வார் பஞ்ச்!

Subscribe to Oneindia Tamil

ஆழ்வார் படத்தில் அஜீத்துக்காக நிறைய பஞ்ச் டயலாக்குகளை வைத்துள்ளதாகதகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

நான்கடவுள் பட சர்ச்சையைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் முதல் படம் ஆழ்வார்.மெலிந்து, நலிந்து போய்க் கிடந்த அஜீத் ஆழ்வாரில் பழைய அஜீத்தாக படுபொலிவாக காணப்படுவாராம். இதற்காக கொஞ்சம் போல உடல் வெயிட்டைஏற்றியுள்ளாராம்.

ஆழ்வார் படத்தை சூப்பர் ஹிட்டாக்க அஜீத் உறுதியாக உள்ளார். இதற்கேற்பபடத்திலும் ஏகப்பட்ட சிறப்பு அம்சஙகளை சேர்க்கவுள்ளனராம். குறிபபாக அஜீத்ரசிகர்களை உசுப்பேத்தி, உற்சாகப்படுத்துவதற்காக ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகளைகோர்த்து விட்டுள்ளனராம்.

இந்த பஞ்ச் வசனங்கள் மூலம் ஏகப்பட்ட பேருக்கு பதில் கொடுக்கப் போகிறாராம்அஜீத். நான் கடவுள் சர்ச்சையால் தான் இந்த பஞ்ச் டயலாக்குகளாக என்று அஜீத்தரப்பிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் யாரையும் குறி வைத்து பஞ்ச் டயலாக்குள்வைக்கப்படவில்லை.

படத்தின் கதைக்கு ஏற்பவே இந்த டயலாக்குகள் இருக்கும். மற்றபடி யாரையும்எதிர்த்தோ, நக்கலடித்தோ, கிண்டலடித்தோ பஞ்ச் டயலாக்குகள் இடம்பெறாது என்றுகூறுகிறார்கள்.

இப்படத்தின் மூலம் பாலாவுக்கு சரியான பதிலடி கொடுக்க ஆர்வமாக உள்ளாராம்அஜீத். இதற்காக கேரக்டரை மிகச் சிறப்பாக செய்வதற்காக நிறைய ஹோம் ஒர்க்செய்து வருகிறாராம் அஜீத்.

அஜீத்தை ஆழ்வார் காப்பாற்றுவாராக

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil