கங்குவா வாங்கிய அடி.. சிவாவுக்கு கல்தா கொடுத்த அஜித்?.. மீண்டும் இணைகிறதா மாஸ் கூட்டணி?
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அதனையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் யார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கப்போகிறார் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருந்த சூழலில்; சிவாவுடன் இணையலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு இயக்குநரின் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித்குமார். கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் வேலைகள் படு ஸ்லோவாக நடந்து ஒருவழியாக முடிந்திருக்கின்றன. சமீபத்தில்தான் தனது போர்ஷனுக்கான டப்பிங் பணிகளை அவர் முடித்தார். திரிஷாவுடன் அவர் கோட் ஷூட்டில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டானது. கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருக்கும் விடாமுயற்சி அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருக்கு மூன்று கெட்டப்புகள் என்று கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றாக க்ளீன் ஷேவ் செய்து உடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக இருந்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதனைப் பார்த்த ஏகே ரசிகர்கள் உருவ கேலி செய்தவர்களுக்கு அஜித்குமார் தரமான பதிலடியை கொடுத்துவிட்டதாக அந்த ஃபோட்டோவை ட்ரெண்டாக்கினர். அடுத்த வருடம் மே மாதம் இந்தப் படம் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது.
சிவாவுடன் கூட்டணி: விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் இருந்தது. சூழல் இப்படி இருக்க அவர் மீண்டும் சிவாவுடன் கூட்டணி வைக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் ஏற்கனவே சேர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினார்கள். அந்தப் படங்களில் விவேகம் தவிர்த்து மற்ற மூன்று படங்களும் மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா கொடுத்த அடி: சிவாவுடன் அஜித் மீண்டும் இணையப்போகிறார் என்று தகவல்கள் வெளியானதும்; அஜித்தின் ரசிகர்கள் பதற்றமடைய ஆரம்பித்தார்கள். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய கங்குவா, அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே தோல்வி என்பதைத் தாண்டி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. இதன் காரணமாக மீண்டும் சிவாவுடன் அஜித் இணைவது பெரும் ரிஸ்க் என்று ஓபனாகவே சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி?: இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித்தும், வெங்கட் பிரபுவும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. இடையில் இரண்டு பேரும் சேர்ந்து மங்காத்தா படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒர்க் செய்ய முடிவெடுத்ததாகவும்; சில பிரச்னைகள் காரணமாக அந்தக் கூட்டணி நிகழாமல் போய்விட்டதாகவும் தகவல் வெளியானது. தற்போது வெங்கட் பிரபுவுக்கும், அஜித்துக்கும் இருந்த மனஸ்தாபங்கள் தீர்ந்துவிட்டன; எனவே வெங்கட் பிரபுவை அழைத்து அஜித் கதை கேட்டு அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனெனில் அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது மங்காத்தா. அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்ததன் காரணமாக மீண்டும் அவர்கள் இணைந்தால் கண்டிப்பாக படம் மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள்.


Click it and Unblock the Notifications











