PV சிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் அஜித்குமார்.. அவரு பொண்ணப் பாருங்க

ஹைதராபாத்: நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் உடன் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. நடிகர் அஜித்குமார், தற்போது அவரது இரண்டு படங்களான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்துக் கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்த நிலையில், அஜித் குமார், தனது குடும்பத்துடன் பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமார், என்பதோடு சேர்த்து, கார் பந்தய வீரர் அஜித்குமார் எனக் கூறுவதும் மிகப்பொருத்தமாக இருக்கும் எனக் கூறும் அளவுக்கு, ஐரோப்பிய கார் பந்தயத்திற்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றார் அஜித்குமார். அடுத்த ஆண்டு தொடங்கி, கிட்டத்தட்ட அக்டோபர் வரை இந்தக் கார் பந்தயம் நடைபெறவுள்ளது. எனவே, இந்தக் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தனது பெயரில் புதிய அணியை உருவாக்கி, அபுதாபியில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றார்.

ajithkumar pv sindhu marriage ajithkumar family

இரண்டு படங்கள்: இதுமட்டும் இல்லாமல், லைகா புரெடக்‌ஷனில் விடாமுயற்சி, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு அதாவது, 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படமும், அடுத்த ஆண்டு இடைப்பட்ட மாதங்களில் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. விடாமுயற்சி படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

விடாமுயற்சி: அஜித்குமார் தற்போது தனது உடல் எடையை பெருமளவு குறைத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், கார் பந்தயத்தில் கலந்து கொள்வதுதான் என்றாலும், அதனை விடாமுயற்சி படக்குழுவினரும், குட் பேட் அக்லி படக்குழுவினரும் தங்களது படங்களில் சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அஜித்துக்கு தனது உடல் எடையை அதிகரிப்பதோ, குறைப்பது என்பதோ சவாலான விஷுயமாக இருந்ததில்லை. எனவே கார் பந்தயத்தை கருத்தில் கொண்டு அஜித் தனது உடல் எடையைக் குறைத்திருந்தாலும், படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

ajithkumar pv sindhu marriage ajithkumar family

பி.பி. சிந்து: விடாமுயற்சி படத்தின் பாடல் காட்சிகள், தாய்லாந்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், அஜித்குமார் நேரடியாக சென்னைக்கு வந்துள்ளார். சென்னை வந்த அவர், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஜித்குமார், அவரது மனைவி நடிகை ஷாலினி, மகள் ஆனோஷ்கா, மகன் ஆத்விக் என மொத்த குடும்பமும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அஜித்குமாரின் மகளைப் பார்த்த ரசிகர்கள், "அஜித்தைபோல் செம அழகாக உள்ளார் அனோஷ்கா, குடும்பமே அழகாக இருக்கே சுத்திப் போடுங்கப்பா" என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X