விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த கையோடு அஜித் செய்தது இதுவா?.. ஃபெராரி கார் ஜொலிக்குதே பாஸ்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

Ajith Vidaamuyarchi Good Bad Ugly

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட இந்த லுக்கிற்காகவே இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் விடாமுயற்சிக்கு காத்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்தனர்.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்களும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. இந்தப் படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு அஜித் அருமையாக நடனம் ஆடியிருக்கிறார் என்று சமீபத்தில்கூட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார் வாங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை பைக் மற்றும் கார்கள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். அவரிடம் விலையுயர்ந்த பைக்குகள், கார்கள் இருக்கின்றன. பைக் டூர் செல்வதற்கு என்று தனி தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார் அவர். இந்நிலையில் அஜித்குமார் புதிய ஃபெராரி கார் ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிகப்பு நிற ஃபெராரியுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் சிலர் பகிர்ந்து ஏகே புது கார் வாங்கியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X