நேற்று விபத்து.. இன்று அஜித் என்ன செய்கிறார் பாருங்க.. மனுஷன் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு
சென்னை: அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் திடீரென தள்ளிப்போயிருக்கிறது. அதேசமயம் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க துபாயில் நடக்கவிருக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று விபத்து ஒன்றை சந்தித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மிக மெதுவாக நடந்தது. ஒருவழியாக படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிளும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

ரிலீஸ் தாமதம்: நீண்ட தாமதத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். அதில் முத்தாய்ப்பாக படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தப் பொங்கல் அஜித் பொங்கல் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதற்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தார் அஜித்குமார். முதலில் இந்தப் படம்தான் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் பொங்கல் ரிலீஸ் பிளானில் விடாமுயற்சி இருந்ததால் இதன் ரிலீஸ் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளி போயிருக்கிறது. ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் ஒரு போஸ்டருடன் வெளியானது. ஆகமொத்தம் இந்த வருடம் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாவதால் ஏகே ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
கார் ரேஸ்: இதற்கிடையே அஜித்துக்கு கார் ரேஸ் என்றால் எவ்வளவு பிரியம் என்று அனைவரும் அறிந்ததே. அவர் துபாயில் நடக்கவிருக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதனையொட்டி தீவிர பயிற்சியில் அவர் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது ட்ராக்கில் இருந்த சுவற்றில் கார் பலமாக மோதியது. நல்ல வேளையாக அஜித்துக்கு எதுவும் ஆகவில்லை. அதுதொடர்பான வீடியோ நேற்று பயங்கர ட்ரெண்டானது.
இன்று அஜித்: நேற்று அஜித் விபத்தை சந்தித்த சூழலில் இன்று அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.இதுகுறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறுகையில், ஜனவரி 11ஆம் தேதி துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள கடுமையாக பயிற்சி செய்துவருகிறார். அப்படி அவர் பயிற்சி செய்தபோதுதான் விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி சேதமடைந்துவிட்டது. அஜித் நன்றாகத்தான் இருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் இன்றும் பயிற்சியை தொடர்வார்'”என்றார்.


Click it and Unblock the Notifications











