எனது சினிமா வாழ்க்கை ஓவரா?.. பரவிய வதந்திக்கு அஜித் வைத்த முற்றுப்புள்ளி.. செம பிளான்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும் வசுல் ரீதியாக சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க; மறுபக்கமோ அஜித்குமார் இன்னும் சில வருடங்கள் மட்டுமே நடிப்பார் என்றும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் அதுகுறித்து அஜித்குமார் கொடுத்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்திருக்கிறார்.
அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. முதலில் விடாமுயற்சி படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கியிருந்த அந்தப் படம் பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. முதன்முறையாக மகிழுடன் இணைந்த படம் இப்படி மகிழ்ச்சி இல்லாமல் ஆகிவிட்டதே என்ற பேச்சுத்தான் அந்தப் படம் ரிலீஸானபோது ஏகே ரசிகர்களிடம் பெரிய வருத்ததுடன் கூடிய பேச்சாக இருந்தது. குறிப்பாக அதில் எந்த மாஸ் சீனுமே இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் ஓபனாகவே வைத்தார்கள்.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சியில் விட்டதை இதில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ஆதிக் படம் முழுக்க ஏகப்பட்ட மாஸ் சீன்களையும், ரெஃபரன்ஸ் சீன்களையும் வைத்திருந்தார். அதேசமயம் அது கொஞ்சம் ஓவர் டோஸாகவும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படம் ஏகே ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தியை கொடுத்தது.
கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே ஒரே வருடத்தில் இரண்டு அஜித் ரிலீஸாவதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்போதுதான் அப்படி நடந்திருந்தது. அதற்கு ஒரே காரணம் கார் ரேஸ் மட்டும்தான். சினிமாவில் அவர் அறிமுகமானதிலிருந்தே அவர் ஒரு ரேஸ் பிரியர் என்று எல்லோருக்குமே தெரியும். அவரும் சில போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அதன் காரணமாக விபத்துக்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் இப்போதுதான் அவர் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதனால்தான் இரண்டு படங்களின் ஷூட்டிங்கை விறுவிறுவென்று முடித்தார்.
பத்மபூஷன் அஜித்: ரேஸில் தனது டீமுடன் கலந்துகொண்ட அவர் வெற்றிகளையும் பெற ஆரம்பித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதினை வழங்கியது. அதனை மிக பெருமிதமாக கருதுகிறார்கள் ரசிகர்கள். அந்த விருதை வாங்கிய பிறகு பேட்டிகளும் கொடுத்த ஆரம்பித்திருக்கிறார் ஏகே. இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் சில விஷயங்களை தெளிவாக பேசியிருக்கிறார் அவர்.
அஜித்தின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்வரை ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் ஒரு படம் நடிக்க முடிந்ஹ்டால் ஒவ்வொரு ஆண்டும் என்னால் ஒரு படத்தை வெளியிட முடியும். இப்படி செய்தால்தான் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரேஸிங்கில் எனது கவனம் இருக்கும். அது அணியின் உரிமையாளராகோ, ஓட்டுநராகவோ இருந்தாலும் சரி. ஒரு நடிகராக எனக்கென்று இருக்கும் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ரேஸிங் மற்றும் நடிப்பு இரண்டுக்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்குவது என்பது எனது திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற விமர்சனத்தை வைப்பவர்களை அமைதிப்படுத்தும்.
மதுவை நிறுத்திவிட்டேன்: ஒருகாலத்தில் நான் அதீத உடல் எடையுடன் இருந்தேன். ஆனால் ரேஸிங்கிற்கு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்த நாளிலிருந்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்றுவரை நான் 42 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன். உணவில் கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிளிங் போன்றவை இந்த உடல் எடை குறைப்புக்கு உதவி செய்தன. மதுவை நிறுத்தி சைவ உணவுக்கு மாறியிருக்கிறேன். சிறந்த உடல் தகுதியை பெற தேவையானவற்றை செய்துவருகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











