'வலிமை'யான க்ளிக்…. இணையத்தில் டிரெண்டாகும் போட்டோ !
சென்னை : இயக்குனர் வினோத்துடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வலிமை
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

4 மொழிகளில்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அசத்தலான டிரைலர்
தற்போது வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் 24ம் தேதி வெளியாகக் காத்திருக்கிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவைகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வலிமை படத்தின் தெலுங்கு, இந்தி, கன்னடம் என 3 மொழிகளில் டிரைலர் நேற்று வெளியானது. இதில் தமிழ் மொழி டிரெய்லர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியானது

அஜித்துடன் வினோத்
இந்நிலையில், இயக்குநர் எச். வினோத், சவுண்ட் என்ஜினியருடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வலிமைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் ஒலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. அஜித் அதை பார்வையிட சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











