ஷாலினி கன்னத்திலேயே பசக்னு ஒரு முத்தம் கொடுத்த அஜித்.. காதல் மன்னன்னா சும்மாவா.. க்யூட் வீடியோ

சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிற ஆசியா அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் இணைந்து கலந்து கொண்டு வருகிறார். இவர்கள் குழுவில் மொத்தம் இரண்டு கார்கள் மற்றும் ஐந்து டிரைவர்கள் உள்ளனர். இதில் நரைன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஜூலின் கெர்பி ஒரு காரிலும், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமன் வாஸ்நைக் மற்றொரு காரிலும் டிரைவரகளாக பங்கு பெற்று வருகிறார்கள்.

இந்த கார் பந்தயம் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த வாரத்திலேயே மலேசியாவுக்கு சென்று, பயிற்சியில் எல்லாம் ஈடுபட்டார் அஜித். அப்போது அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டமாக அலைமோதினர். அவர்கள் அனைவருடனும் தனித்தனியே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார் அஜித். இப்படி இருக்கும்போது அவரது கார் நேற்று ரேஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியில் பழுதாகி நின்றது. அப்போது மிகவும் கூலாக காரில் இருந்து இறங்கி, காரை சரி செய்யும் வேலைகளில் அஜித் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Ajithkumar Kiss His Wife Actress Shalini Between Asian Le Mans Series At Malaysia - Watch
Photo Credit:

கன்னத்திலேயே முத்தம்: கார் பந்தயம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது. இதற்கிடையில் அஜித் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ என்றால் அது அஜித் தனது காதல் மனைவி ஷாலினியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு மீண்டும் தனது அணியை நோக்கி திரும்பும் போது ஷாலினிக்கு கன்னத்திலேயே ஒரு முத்தம் பசக் என்று வைக்கிறார்.

ரசிகர்கள் ஆரவாரம்: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் இதைப் பார்த்த ரசிகர்கள், அதாவது இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரசிகர்கள் தல, தல என்று கத்துகிறார்கள். அதேபோல் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் காதல் மன்னன்னு சும்மாவா சொன்னார்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அஜித் குமார் மற்றும் நரைன் கார்த்திகேயன் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X