twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 5கோடி மதிப்புள்ள சொகுசு காரில் அஜித்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள் !

    |

    சென்னை : நடிகர் அஜித் சொகுசு கார் அருகே நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

    அஜீத் குமார், எச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'AK61' படத்தில் இணைந்துள்ளார்.

    ஏகே 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் பூனேவில் நடக்க உள்ளது. அதற்காக செட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ பைக்...அஜித் பயன்படுத்திய கார் பேரு என்னங்க...தீயாய் தேடும் ரசிகர்கள் பிஎம்டபிள்யூ பைக்...அஜித் பயன்படுத்திய கார் பேரு என்னங்க...தீயாய் தேடும் ரசிகர்கள்

    அஜித் 61

    அஜித் 61

    நேர்கொண்ட பார்வை,வலிமை படத்தைத் தொடர்ந்து எச் வினோத் உடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகமாக ‛அஜித் 61' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

    அஜித் 61 தள்ளிப்போகலாம்

    அஜித் 61 தள்ளிப்போகலாம்

    அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் கூடுதல் காலமாகும் என்பதால் ஏற்கனவே திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நிறைவடையாது என்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்பட்ட இந்த படம் டிசம்பருக்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வெளிநாட்டு பயணம்

    வெளிநாட்டு பயணம்

    வலிமை திரைப்படத்தை முடித்த அஜித், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார். இந்தியா கேட் முன்பு தேசிய கொடியை பிடித்த படி அவர் இருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து சென்ற அவர், நண்பர்களுடன் முக்கிய இடங்களுக்கு சென்று போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

    சொகுசு காருடன்

    சொகுசு காருடன்

    தற்போது லண்டனில் ஒரு கார் அருகில் எடுத்த புகைப்படம் வைரலானது. அஜித்துக்காக அந்தப் புகைப்படம் வைரலானது என்றாலும், அஜித் ஏன் குறிப்பாக அந்தக் காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்தார்? அந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.. அந்தக் காரின் விலை மட்டும் சுமார் 5 கோடி ரூபாயாம், பல அம்சங்களைக் கொண்ட அந்த காருக்கு லண்டனில் பெரிய வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மெக்லாரன் ஷோரூமுக்கு சென்ற அஜித் இந்த போட்டோவை ஆசை ஆசையாக எடுத்துள்ளார்.

    English summary
    Ajith is currently touring in UK and Europe. went to the McLaren luxury car showroom in London and visited the cars there.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X