கியர போட்டு.. எக்ஸ்லேட்டர மிதிச்சா.. கால் வலி எல்லாம் மறந்து போகும்.. ஏ.கே.வின் புது வீடியோ ரிலீஸ்!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தினை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகின்றது. படத்தில் அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். படப்பிடிப்பின் போது டூப் இல்லாமல் நடிகர் அஜித் மற்றும் ஆரவ் நடித்திருந்த விபத்து காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்று வருகின்றது. கதையும் அதற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டுள்ளது.

விடமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோதே நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித் மிகவும் மெனக்கெடலுடன் நடித்தார் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

Ajithkumar Vidaamuyarchi

விடமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது நடிகர் அஜித்குமாருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுமட்டும் இல்லாமல், தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடெக்‌ஷனுக்கும் அஜித்குமாருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்தின் பேச்சினை அஜித் கண்டுகொள்ளாமலே இருந்ததாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தது.

Ajithkumar Vidaamuyarchi

இயக்குநருடன் கருத்து வேறுபாடு: அஜித்திற்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையே படம் தொடங்கிய நாட்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப்பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்களை கூறியதாகவும், ஒரு சில காட்சிகளில் அஜித்தின் நடிப்பில் திருப்தி இல்லாதபோது, மகிழ் திருமேனி மாற்றுக்கருத்து கூறியதாகவும் இது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Ajithkumar Vidaamuyarchi

விடாமுயற்சி: இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியில் இருந்து அஜர்பைஜானில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. 20ஆம் தேதி சென்னையில் இருந்து அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் கூட அஜர்பைஜானில் அஜித்குமார் ரேஸ் கார் ஓட்டும் வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில், இன்று அதாவது ஜூன் 24ஆம் தேதி அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டது. அந்த வீடிடோவில் ஏற்கனவே படக்குழு தரப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட விபத்துக் காட்சியின் தொடக்கம் போல் தெரிகின்றது. வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உள்ளனர். ரோப் மூலம் கட்டப்பட்ட கார் நாலாபுறமும் சுற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவியது.

Ajithkumar Vidaamuyarchi

புது வீடியோ: இந்நிலையில் அஜித்துன் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் 6 நிமிடங்களுக்கு மேலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்குமார் கடந்த ஜூன் 21ஆம் தேதி கார் ஒட்டியது தொடர்பானதுதான். துபாய் ஆர்டோம் எனப்படும் பிரபல கார் ரேஸ் மைய்யத்தில் சுமார் 220 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகச் செல்லும் அஜித்குமார் கண்ணில் கொஞ்சம் கூட பயமில்லாமல் காரை ஓட்டுகின்றார். மேலும் துபாயில் உள்ள கார் ரேசர்களிடம் உரையாடலிலும் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Ajithkumar Vidaamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X