உருகிப்போய் காலில் முத்தமிடும் அஜித்..யாரும் இப்படி பார்த்திருக்க மாட்டாங்க..யார் அயர்டன் சென்னா?

சென்னை: நடிகர் அஜித்குமார் இந்த வருடத்தில் மட்டும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இவற்றில் குட் பேட் அக்லி மட்டும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. விடாமுயற்சியோ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடியை வாங்கியது. இது ஒருபக்கம் இருக்க கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்திவரும் அவர்; தற்போது பிரேசில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. எப்போது ஒரு படத்தில் நடித்து கொஞ்ச நாட்கள் கழித்துதான் இன்னொரு படத்தில் கமிட்டாவார் அவர். ஆனால் இவ்வருடமோ ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். முதலில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்தார் அவர். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோதே இன்னொருபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துக்கொடுத்தார்.

இரண்டு படங்கள் ரிலீஸ்: ஒரே வருடத்தில் இந்த இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு முதலில் விடாமுயற்சி பிப்ரவரி மாதமும், அடுத்ததாக குட் பேட் அக்லி ஏப்ரல் மாதமும் வெளியாகின. இந்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர்கள் முதன்முறையாக அஜித்துடன் இணைந்திருந்ததால் இரு படங்கள் மீதும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைத்துறையிலேயே பெரும்பாலானவர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajithkumar Paid his Tribute To Brazilian Car Racer Ayarton Senna

விடாமுயற்சி அடி: ஆனால் அந்த எதிர்பார்ப்பை விடாமுயற்சி திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. பெரிய மாஸ் ஹீரோ விடாமுயற்சி போன்ற கதையில் நடித்ததை பலரும் பாராட்டினாலும்; திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் ஒன்றுமே இல்லை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். அதன் காரணமாக விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாக சரியான அடியை வாங்கியது அந்தப் படம். அடுத்ததாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படமோ வசூலில் சக்கைப்போடு போட்டது.

கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே அஜித்துக்கு கார் ரேஸில் தீராத ஆர்வம் இருப்பதை அனைவரும் அறிவோம். தன்னுடைய சினிமா கரியரின் ஆரம்பத்திலிருந்தே சில ரேஸ்களில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் பெரிய வெற்றியை எதுவும் பெறவில்லை. அதேசமயம் ஏகப்பட்ட விபத்துக்களை சந்தித்திருக்கிறார். அவர் அப்படி பந்தயத்தில் கலந்துகொள்வது குறித்து எழுந்த விமர்சனத்துக்கெல்லாம் சர்ச்சைக்குரிய முறையில்தான் ஏகே பதிலடி கொடுத்திருக்கிறார்.

இப்போது வெற்றி: பிறகு நிலைமையை புரிந்துகொண்ட அவர்; நீண்ட காலம் ரேஸை ஒதுக்கிவைத்து படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் அவரது கவனமெல்லாம் கார் பந்தயத்துக்கு சென்றிருக்கிறது. துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த ரேஸில் தனது ரேஸிங் டீமுடன் கலந்துகொண்ட அவர் பரிசுகளையும் தட்டி சென்றார். இதனால் அவர் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார். தொடர்ந்து பந்தயங்களிலும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்.

Take a Poll

பிரேசிலில் அஜித்: அந்தவகையில் பிரேசிலில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக தற்போது அங்கு சென்றிருக்கிறார் அவர். அங்கு சென்ற அஜித் தனது ரோல் மாடலும், பிரபல கார் ரேஸருமான அயர்டன் சென்னாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். மேலும் அப்போது சென்னாவின் சிலைக்கு ஏகே முத்தமும் கொடுத்தார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. மொத்தம் மூன்று முறை ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் முதலிடத்தை பிடித்த சென்னா பிரேசில் நாட்டை சேர்ந்தவர். முழு எனர்ஜியோடு எப்போதும் இருந்த அவர்; கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X