கூட்டத்தை பார்த்து பயந்த அஜித் மகள்.. டக்குனு என்ன செய்யறாருனு பாருங்க.. மனுஷன் மகள் மேல செம உசுருப்பா
பாலக்காடு: நடிகர் அஜித் குமார் தற்போது தனது கார் ரேஸிங் மற்றும் படங்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது 64வது படம் வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படி இருக்கும்போது, அஜித் குமார் தனது மகள் அனோஷ்காவுடன் பாலக்காடு அருகில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அஜித் தனது மகளுடன் வந்திருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க கோவிலில் சூழ்ந்து கொண்டார்கள். கோவிலை விட்டு வெளியே வந்ததும் அஜித்துக்கு வணக்கம் சொல்லி, ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினார். இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களை நோக்கி, தனது கையில் ஹார்ட் சிம்பள் காட்டிவிட்டு, லவ் யூ என்று சொன்னார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அஜித்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அணி கார் ரேஸில் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்கள். சிலர் தங்களது மொபைல்களில் செல்ஃபிகளை எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாலினியையும் மகன் ஆத்விக்கையும் காணவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பயந்த மகள்: அதேபோல் அஜித் வந்துள்ளார் என்ற தகவல் கேள்விப்பட்டதும், கோவிலில் குவிந்த ரசிகர்கள், அஜித்தை பார்க்க ஆர்வமாக இருந்தார்கள். அதுவும் அவர் கோவிலின் வளாகம் தொடங்கி, அவர் கோவிலுக்குள் அவர் எங்கு எல்லாம் சென்றாரோ அங்கு எல்லாம் ரசிகர்கள் சென்றார்கள். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கவே, அஜித் மகள் கொஞ்சம் பயந்ததைப் போல காணப்பட்டார். உடனே அஜித் தனது மகளை அழைத்து தனது அருகில் நிருத்திக் கொண்டார். அதன் பின்னரே புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தார். இவரது இந்த செயல் தொடர்பான வீடியோக்களைப் பார்த்தவர்கள், மனுசனுக்கு மகள் என்றால் ரொம்பவும் உசுரு போலயே என்று பேசி வருகிறார்கள்.
குடும்பத்தலைவன்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய பேட்மிடன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண நிகழ்வில் தனது குடும்பத்துடன் அஜித் கலந்து கொண்டார். அப்போது தனது மனைவி மற்றும் மகளுக்காக கார் கதவைத் திறந்து விட்டு, அவர் ஷாலினியின் கைகளைப் பிடித்துக் கொண்டது எல்லாம் பார்க்கும்போது ரொம்பவும் அன்பான மற்றும் பொறுப்பான குடும்பத்தலைவன் என்பதற்கு மற்றொரு உதாரணம் தல அஜித் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











