மீண்டும் மீண்டுமா?.. விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. ஏகேவுக்கு என்ன ஆச்சு?

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் குட் பேட் அக்லி சுமாரான வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி படுதோல்வியை சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித்குமார்; இப்போது இத்தாலியில் நடந்துவரும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டபோது அவர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

அஜித்குமார் தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே டாப் 4 இடத்துக்குள் நீடித்துவருகிறார். இடையில் வருடத்துக்கு ஒரு படம் என்று நடித்துக்கொண்டிருந்த் அவர்; கார் ரேஸில் தனது கவனத்தை திருப்பியிருப்பதால்; இந்த ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி ஆகிய படங்கள் சில மாதங்கள் முன்னதாக வெளியாகின.

கார் ரேஸில் மும்முரம்: ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியானது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. சினிமாவில் கவனத்தை அவர் செலுத்தினாலும்; அவரது அதிகப்படியான கவனம் கார் ரேஸ் பக்கமும் இப்போது திரும்பியிருக்கிறது. துபாயில் நடந்த கார் ரேஸில் தனது டீமுடன் கலந்துகொண்டு பரிசு வென்று அசத்தினார். அது பெரிய மகிழ்ச்சியை ஏகே ஃபேன்ஸிடம் கொடுத்திருந்தது.

Ajith s car involved in an accident during a car race in Italy
Photo Credit:

நாடு நாடாக ரேஸ்: துபாயில் நடந்த ரேஸில் பெற்ற வெற்றி அஜித்துக்கு மேற்கொண்டு உத்வேகத்தை கொடுத்தது. இதனால் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த கார் ரேஸிலும் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார் அவர். ரேஸ் நடக்கும் காலத்தில் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக அவர் கூறியிருப்பதன் மூலமே தெரிந்துகொள்ளலாம்; அவரது கவனம் இப்போது எதில் அதிகம் இருக்கிறது என்பதை.

இத்தாலியில் ரேஸ்; அஜித் சந்தித்த விபத்து: இந்நிலையில் இத்தாலியில் ஜிடி 4 கார் ரேஸ் நடந்துவருகிறது. இதிலும் வழக்கம்போல் ஏகே கலந்துகொண்டார். முன்னர் நடந்த பந்தயங்களில் வென்று பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையிலும் இப்பந்தயத்தில் காரை ஓட்டினார் அஜித்குமார். ஆனால் இந்த ரேஸில் அவரது கார் விபத்தில் சிக்கியது.

என்ன நடந்தது?: அதாவது இந்தப் பந்தயத்தில் அஜித் காருக்கு முன்பாக சென்ற கார் திடீரென ட்ராக்கிலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக பின்னால் வந்த அஜித்தின் கார் அந்தக் காரின் மீது மோதியது. அப்படி மோதியதில் ஏகேவுடைய காரின் இடப்புற முன்பகுதி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக காருக்குள் இருந்த அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'பார்த்து ஏகே. உங்களுக்கு கார் ரேஸில் வெற்றி முக்கியம்தான். ஆனால் அதைவிட நீங்கள் எங்களுக்கு முக்கியம்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X