என்னது அஜித் மகள் டேட்டிங் சென்றாரா?.. இது என்ன புது கதையா இருக்கு.. ட்ரெண்டாகும் ஃபோட்டோ
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. நிச்சயமாக விடாமுயற்சி படத்தில் விட்டதை குட் பேட் அக்லியில் பிடித்துவிடலாம் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் மகள் ஃபோட்டோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்து ஹீரோவானவர்களே காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் அஜித்துக்கோ அப்படி எதுவும் இல்லை. சொல்லப்போனால் சினிமாவில் சரியான வழிகாட்டலும் இல்லை. இருந்தாலும் அஜித் தானாகவே விழுந்து, எழுந்து, கற்றுக்கொண்டு தனக்கான தனியிடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை 64 படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாவிட்டாலும், ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் அவரை திரையில் காண்பதற்கு தவம் இருக்கிறார்கள்.

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. கடந்த ஆறாம் தேதி வெளியான அந்தப் படத்துக்கு கலவையான விமர்சனத்தையே ரசிகர்கள் கொடுத்தார்கள். அதேசமயம் ஹீரோயிச இமேஜை உடைத்து அஜித் விடாமுயற்சியில் நடித்ததை பலரும் பாராட்டிவருகிறார்கள். அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ரேஸ் டூ பத்ம பூஷன்: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதிலும் அவர் தவறுவதில்லை. அந்தவகையில் தனக்கு ரொம்ப பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார் அவர். சமீபத்தில்கூட துபாயில் நடந்த ஒரு கார் ரேஸ் பந்தயத்தில் தனது டீமுடன் களமிறங்கி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தவிருப்பதாகவும்; ரேஸ் நடக்கும் சீசன்களில் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டார். அதேபோல் அவருக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருதையும் வழங்கி கௌரவித்தது.
அஜித்தின் குடும்பம்: இதற்கிடையே அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டார் அஜித். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆத்விக் கால் பந்து விளையாட்டில் தீராத ஆர்வத்தினை கொண்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாவது வழக்கம். அனௌஷ்கா தற்போது படிப்பில் கவனம் செலுத்திவருவதாக தெரிகிறது.
அனௌஷ்காவின் டேட்டிங்: ஷாலினி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அனௌஷ்காவும் பங்கேற்பார். அப்போது வெளியாகும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக அஜித்தின் மகள் ஹீரோயின் ஆகலாம்; அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார் என்று கூறுவார்கள். இந்நிலையில் ஷாலினி பகிர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு தனது மகளுடன் ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு சென்ற அவர்; அனௌஷ்காவுடன் ஒரு டேட் நைட் என்று தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம்தான் தற்போது திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











