விடாமுயற்சியில் அஜித்தின் பணிகள் ஓவர்.. இனி ரிலீஸ் மட்டும்தான்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். கடந்த வருடம் படத்தின் ஷூட்டிங் தொடங்கினாலும் ரொம்பவே தாமதமாக நடந்தது. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதோ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசர் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விடாமுயற்சி அப்டேட் கிடைத்ததால் அஜித் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இந்தச் சூழலில் அஜித்தின் பணிகள் படத்தில் மொத்தமாக முடிந்திருக்கிறது.

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசை வாரி சுருட்டியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வாரிசு படத்தைவிடவும் ஒருபடி மேலேதான் துணிவு இருந்ததாக பலரும் கூறினார்கள். அந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதால் மகிழ் திருமேனி லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்குவதற்கு கமிட்டானார்.

vidaamuyarchi ajith

விடாமுயற்சி: அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் கமிட்டானார்கள். முதலில் நீரவ் ஷா சில நாட்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் கமிட்டானார். அதுமட்டுமின்றி ஆர்ட் டைரக்டர் மிலனும் உயிரிழந்தார். இப்படி பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ரொம்பவே தள்ளிப்போனது.

படத்தின் அப்டேட்: ஒருகட்டத்தில் விடாமுயற்சி படத்தை விட்டுவிட்டார்களோ என்றெல்லாம் ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில் எந்தவிதமான வசனமும் இல்லையென்றாலும் மகிழ் திருமேனியின் மேக்கிங், அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், படத்தின் லொக்கேஷன்கள், அனிருத்தின் இசை ஆகியவை அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களிடம் டீசருக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

சிக்கலில் படக்குழு: அதேசமயம் படம் இன்னொரு சிக்கலிலும் மாட்டியிருக்கிறது. அதாவது இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. மேலும் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இதனால் லைகா நிறுவனம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் திரைத்துறையில் எழுந்திருக்கிறது.

டப்பிங் ஓவர்: படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் விடாமுயற் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் அஜித் தனது டப்பிங் பணியை நிறைவு செய்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது. முன்னதாக அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ஒரே நேரத்தில் பல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு படங்களில் பணியாற்றியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X