அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி.. கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்.. அதிர்ச்சியில் படக்குழு

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் இடையில் தடைப்பட்டிருந்த சூழலில் மீண்டும் தொடங்கி இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு விஷயத்தால் படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

ajith good bad ugly adhik ravichandran

இறுதிக்கட்ட பணிகள்: நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அங்கு விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து; இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது உறுதியாக தெரியாத சூழலில்; இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் விடாமுயற்சி ரிலீஸாகும் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் உறுதியான தகவல்கள் இதுவரை எதுவும் வரவில்லை.

விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து வாலி படத்தையும் இயக்கியிருந்த சூர்யா; ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். எனவே இந்த காம்போ இப்படத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கசிந்த ஸ்டில்ஸ்: இந்நிலையில் குட் பேட் அக்லி படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. அதாவது படத்தின் ஷூட்டிங் இப்போது ஸ்பெயினில் நடந்துவருகிறது. அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.அந்தப் புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா அஜித் வேற லெவலில் இருக்காரே. அவரை வைத்து ஆதிக் தரமான சம்பவம் செய்யவிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X