Ajith - விஜய்யுடன் சேர்ந்து நடிக்கலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ட்ரெண்டாகும் அஜித்தின் பேச்சு
சென்னை: விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருவருக்கும்தான் போட்டி நிலவிவருகிறது. விஜய் தற்போது GOAT படத்திலும், அஜித் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என பலரும் விருப்பப்படுகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது பற்றி அஜித் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல் ஹாசன் என்ற வரிசையில் இருக்கிறார்கள் அஜித்தும் விஜயும். இரண்டு பேருக்குமே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இருவரது படம் வெளியானால் அன்றைய தினம் திருவிழாதான். அதுவும் அவர்களின் படம் ஒரே நாளில் ரிலீஸானால் சொல்லவே வேண்டாம். கடந்த வருட பொங்கலுக்குக்கூட விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகின. அந்த பொங்கல் ரேஸில் துணிவுதான் வென்றதாக அஜித் ரசிகர்களும்; வாரிசுதான் வென்றதாக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

சேர்ந்து நடித்த விஜய், அஜித்: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.
ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலை இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார் விஜய். அதேபோல் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித் குமார்.
ட்ரெண்டாகும் அஜித் பேச்சு: இரண்டு பேரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் இரண்டு பேர் ரசிகர்களின் விருப்பமும்கூட. ஆனால் அது பல வருடங்களாக நடக்கவே இல்லை. இந்நிலையில் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது பற்றி அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அந்தப் பேட்டியில், "விஜய்யுடன் இணைந்து நான் நடிப்பதற்கு முதலில் என்னுடைய ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்படி கதை அமைய வேண்டும். அந்தக் கதை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்தால் நான் கண்டிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடிப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











