அஜித்தின் சம்பள பிரச்னையை தீர்த்த லைகா.. மீண்டும் தொடங்கும் விடாமுயற்சி ஷூட்டிங்?

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் அஜர்பைஜானில் நடந்த ஷெட்யூலுக்கு பிறகு விடாமுயற்சி ஷூட்டிங் நடக்கவே இல்லை. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

Ajith Vidaamuyarchi

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆயினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

என்ன கதை?:அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருந்தார்.

நின்ற ஷூட்டிங்: அஜர்பைஜானில் நடந்த ஷெட்யூலுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் நடக்கவில்லை. அதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார் அஜித். இருந்தாலும் விடாமுயற்சி ஷூட்டிங் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இதற்கிடையே லைகாவுக்கு ஏற்பட்ட பண பிரச்னைதான் ஷூட்டிங் நின்றதற்கான காரணம் என்றும் கூறப்பட்டது.

புதிய தகவல்: இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லைகாவுக்கு ஏற்பட்ட பண பிரச்னை காரணமாக அஜித்தின் சம்பளத்தில் கைவைக்கப்பட்டதால்தான் அஜித் ஷூட்டிங் வரவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போது அஜித்தின் சம்பள பிரச்னையை லைகா தீர்த்துவிட்டதாகவும்; விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கும் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X