விடாமுயற்சி Or GOAT?.. ப்ரீ புக்கிங்கில் முந்தியது யார்?.. அஜித்தா இல்லை விஜய்யா?
சென்னை: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. மகிழ் திருமேனியும், ஏகேவும் முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதேசமயம் பெரிய எதிர்பார்ப்போடு படத்துக்கு வர வேண்டாம் என்று மகிழ் டிஸ்க்ளெய்மர் போட்டுவருகிறார். இந்தச் சூழலில் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும் ஷூட்டிங் என்னவோ மெதுவாகத்தான் நடந்தது. அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக அஜர்பைஜானின் கால சூழ்நிலைதான் மெயின் ரீசன் என்று சொல்லப்படுகிறது.

டீசர் ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் நடக்கவே இல்லை என்றெல்லாம் ஒருகட்டத்தில் தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி விடாமுயற்சி படம் அவ்வளவுதான் என்றும் சொன்னார்கள். அதற்கேற்றபடி ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு அஜித்குமார் பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற கிளம்பிவிட்டார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை படத்தின் படப்பிடிப்பு நடந்துதான் வருகிறது என்று படக்குழு தரப்பிலிருந்து போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்யப்பட்டது. அதற்கேற்றபடி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் ரிலீஸ்: டீசருக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து ட்ரெய்லரும், சவதீகா என்ற பாடலும் ரிலீஸ் செய்யப்பட்டன. டீசருக்கு போல் இல்லாமல் ட்ரெய்லருக்கு பக்கா ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேபோல் பாடலுக்கும் நல்ல வைபை கொடுத்தார்கள் ரசிகர்கள். அந்தப் பாடலுக்கு பிறகு இன்னொரு பாடலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படிப்பட்ட சூழலில் படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
தள்ளிப்போன ரிலீஸ்: ஆனால் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணம் பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி. அந்தப் படக்குழுவிடம் முறையான அனுமதியை விடாமுயற்சி குழு வாங்கவில்லை. எனவே பிரேக் டவுன் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்திடம் பெரும் தொகையை நஷ்ட ஈடாக கேட்டதாகவும்; அந்தப் பேச்சுவார்த்தை முடிய தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப்போய்விட்டதாக தெரிகிறது.
ப்ரீ புக்கிங்: ஒருவழியாக எல்லா பிரச்சனைகளும் முடிந்து நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்துக்கான ப்ரீ புக்கிங் தொடங்கியிருக்கிறது. அதில் முதல் நாளில் மட்டும் ப்ரீ புக்கிங்கில் ஏழு கோடி ரூபாய்வரை படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த GOAT படம் ப்ரீ புக்கிங்கில் 18 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும்; விடாமுயற்சிக்கான புக்கிங் இன்னும் சில நாட்கள் நடக்கும் என்பதால் GOAT சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











