»   »  ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்

ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்

Subscribe to Oneindia Tamil

இதுவரை இல்லாத புது மாதிரியாக ஒரு படம் கூட ஓடாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களை வைத்துக் கொண்டுகோலிவுட்டைக் குழப்பி வரும் ஜெய் ஆகாஷுடன் அடுத்த படத்தில் சதா நடிக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி கை நிறையப் படங்களை வைத்திருப்பவர் ஜெய் ஆகாஷ் மட்டுமே. ஒரு பக்கம்படங்களை புக் செய்து கலக்கும் ஆகாஷ் மறுபக்கம் பிரணதியுடன் டூயட்டிலும் படு பிசியாக உள்ளார்.

ஆகாஷ் கையில் இப்போது 8 படங்கள் இருக்கிறதாம். (மூக்கின் மேல் விரலை வைக்காதீர்கள்) எட்டுப் படங்களில் ஒருசிலவற்றில் பிரணதியும் நடிக்கிறார். மற்ற படங்களில் புதுப் புது ஹீரோயின்களாம். இதில் ஆச்சரியமான விஷயம்என்னவென்றால், ஒரு படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்கப் போவது சதாவாம்!

தேஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சதாவுக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அந்நியன்வெற்றிகரமாக ஓடினால் இப்படத்தின் சம்பளத்தை ஏற்ற திட்டமிட்டுள்ளாராம் சதா.

தான் நடிக்கும் படங்களில் பாதி பைனான்ஸை ஜெய் ஆகாஷே பார்த்துக் கொள்வதால், அவரை புக் செய்ய தயாரிப்பாளர்களதயங்குவதே இல்லை. அதனால் தான் பார்ட்டி கையில் படங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

பைனான்ஸ் செய்வதுடன் நில்லாமல், தமிழில் நடிக்கும் படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் வாங்கி விடுகிறாராம் ஜெய் ஆகாஷ்.அதை தெலுங்கு ரசிகர்களுக்கேற்ற வகையில் சில பல மசாலாக்களை சேர்த்து போணி செய்து அதிலும் காசு பார்த்து விடுகிறாராம்ஜெய் ஆகாஷ்.

சபாஷ் ஆகாஷ்!


Read more about: jai akash have more films
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil