விராட் கோலியின் பயோபிக்… நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகரின் மகன் !

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் உருவானால் அதில் நடிக்க நான் தயாராக இருப்பதாக நாக சைதான்யாவின் தம்பி கூறியுள்ளார்.

அகில், ஏஜெண்ட் என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உளவாளியாக நடிப்பதால், கடுமையாக உழைத்து உடம்பை தாறுமாறாக டெவலப் செய்துள்ளார்.

ஏஜெண்ட் திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார். பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகி உள்ளது.

நடிகை அமலா

நடிகை அமலா

நடிகை அமலா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். மைதிலி என்னைக்காதலி, வேலைக்காரன், சத்யா, அக்னி நட்சத்திரம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அமலாவின் மகன்

அமலாவின் மகன்

1992ம் ஆண்டு தெலுங்கு ஸ்டார் நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாக சைத்தன்யா மற்றும் அகில் அகினேனி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

திரையில் அறிமுகம்

திரையில் அறிமுகம்

அகில் அகினேனி 2015ம் ஆண்டு வெளியான அகில் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவே வந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து Hello, Mr Manju போன்ற திரைப்படங்களில் நடித்தார். அகில் நடித்துள்ள மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பொம்மரில்லு' பாஸ்கர் இயக்குகிறார், இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

விராட் கோலியின் பயோபிக்

விராட் கோலியின் பயோபிக்

இந்நிலையில், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அகில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால் அதில் நடிக்க நான் தயாராக இருப்பதாக கூறினார். அகில் அக்கினேனி கிரிக்கெட் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். மேலும் அவர் ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவர்.

பெரிய ஹிட்

பெரிய ஹிட்

சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது. சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் சச்சின் பயோபிக் டாக்குமெண்டரி திரைப்படமாக வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X