தியேட்டர் வாசலில் அக்‌ஷய் குமார் என்ன செய்றாரு பாருங்க.. என்ன இப்படி இறங்கிட்டாரு?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் திரையரங்கு வாசலில் அக்‌ஷய் குமார் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், "ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

Akshay Kumar asks fans for feedback on Housefull 5 Movie

வரிசையாக தோல்விகள்: அக்‌ஷய் குமாருக்கு கடைசியாக எந்தப் படம் வெற்றி பெற்றதென்று அவரிடமே சென்று கேட்டாலும் அவருக்கே தெரியாத நிலைதான் இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஓஎம்ஜி 2, மிஷன் ராணிகஞ்ச், படே மியான் சோட்டே மியான் ஆகிய மூன்று படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார் அக்‌ஷய் குமார்.

சூரரைப் போற்று ரீமேக்: நிலைமை இப்படி இருக்க எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளி, கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் பாலிவுட்டிலும் இயக்கினார். சர்ஃபிரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். ஆனால் அக்‌ஷய் குமார் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படத்தின் ரிசல்ட் அமைந்து தோல்வியையே சந்தித்தது.

ஹவுஸ்ஃபுல் 5: தற்போது அவர் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தருண் மன்ஷுகனி இயக்கியிருக்கும் அப்படத்தில் அக்‌ஷய் குமாருடன் அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படமானது கடந்த ஜூன் ஆறாம் தேதி வெளியானது. அக்‌ஷய் குமாருக்கு இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக ஹிட் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

தியேட்டர் வாசலில்: ஆனால் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்துக்காக அக்‌ஷய் குமார் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அந்தப் படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிற்கு வெளியே முகத்தில் மாஸ்க் அணிந்தபடி நின்றார். மேலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது, அக்‌ஷய் குமார் எப்படி நடித்திருக்கிறார் என கேள்விகளை முன்வைக்கிறார். ரசிகர்களும் தங்களிடம் கேட்பதே அக்‌ஷய்தான் என தெரியாமல் தங்களது விமர்சனத்தை சொல்லி சென்றார்கள்.அந்த வீடியோவை நெட்டிசன்ஸ் அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X