கமல், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார்: ஷங்கர் போடும் கணக்கு ஒன்னுமே புரியலையே
Recommended Video

சென்னை: 2.0 படத்தை அடுத்து இந்தியன் 2 படத்திலும் அக்ஷய் குமார் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் மூலம் கோலிவுட் வந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். 2.0 படத்தின் ஹீரோவும், வில்லனும் அக்ஷய் தான் என்று ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அக்ஷய் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷய்
2.0 படத்தில் நடித்தபோது அக்ஷய் குமார், ஷங்கர் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுவிட்டதாம். இதையடுத்து தான் உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து இயக்கும் இந்தியன் 2 படத்திலும் அக்ஷய் குமாரை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

கமல்
இந்தியன் 2 படத்திற்காக பிரமாண்டமான செட் போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளாராம். சிம்பு போலீஸ் அதிகாரியாக வித்தியாசமாக நடிக்கப் போகிறாராம். இந்நிலையில் அக்ஷய் குமாருக்கு என்ன கதாபாத்திரமாக இருக்கும் என்ற ஆவல் எழுகிறது.

அஜய் தேவ்கன்
இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் நட்சத்திர பட்டாளத்தையே வைத்து இயக்க திட்டமிடுகிறாரோ ஷங்கர். அது சரி, அவரால் முடியும், திட்டமிடுகிறார். படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ரிலீஸ்
2.0 படம் வரும் 29ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் 4 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலையை லைகா நிறுவனம் கச்சிதமாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











