விருது எல்லாம் காசு, பணம், மணி, துட்டாம் கோப்ப்பால்: ஹீரோ பகீர் தகவல்
மும்பை: கலைஞர்களுக்கு விருதுகள் எப்படி கிடைக்கிறது என்பது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெறுகின்றன. இருப்பினும் அவருக்கு விருதுகள் மட்டும் அந்த அளவுக்கு கிடைப்பது இல்லை.
இந்நிலையில் விருதுகள் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில்,

விருது
விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவோர் போன் செய்து விழாவில் நடனம் ஆடினால் பாதி சம்பளமும், மீதி சம்பளம் விருதாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வேண்டாம்
பணம் கொடுத்து விருதா என்று நினைத்து, நான் ஆடுகிறேன் முழுப் பணத்தையும் கொடுங்கள், விருதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்.

ரசிகர்கள்
எனக்கு விருது முக்கியம் அல்ல. என் ரசிகர்கள் தங்களின் அளவு கடந்த அன்பையும், ஆதரவையும் எனக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அதுவே எனக்கு போதுமானது.

உடற்பயிற்சி
சிறு வயதில் இருந்தே சீக்கிரம் தூங்கிவிட்டு அதிகாலை எழுந்துவிடுவேன். என சக நடிகர்கள் பார்ட்டி முடிந்து அதிகாலை வீடு திரும்பும்போது நான் ஜிம்முக்கு சென்று கொண்டிருப்பேன் என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











