கத்ரீனா கைஃப், கரீனா கபூர்.. நடிகைகளுடன் செம ஜாலியாக விளையாடும் அக்ஷய் குமார்.. சூப்பர் வீடியோ

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் அவருக்கு இதுவரை பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடித்திருந்த பூத் பங்களா படம்கூட தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக ஹைவான் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தமிழை அவர் ஓரங்கட்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Akshay Kumar s Funny Push Moments with Katrina Kaif and Kareena Kapoor Go Viral
Photo Credit:

சர்ச்சை நாயகன்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்ஷய்குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அவர், "ரசிகர்களின் எதிர்ப்பு எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

சூரரைப் போற்று ரீமேக்கும் அடி: நிலைமை இப்படி இருக்க எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளி, கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் பாலிவுட்டிலும் இயக்கினார். சர்ஃபிரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். ஆனால் அக்ஷய் குமார் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படத்தின் ரிசல்ட் அமைந்து தோல்வியையே சந்தித்தது.

பூத் பங்களா: கடைசியாக அவர் Jolly LLB 3, பூத் பங்களா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களின் மீதுமே அவருக்கு ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்துவிட்டன. அடுத்ததாக அவர் நடிப்பில் ஹைவான், Vedat Marathe Veer Daudle Saat உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இவையாவது அவர் எதிர்பார்க்கும் நீண்ட கால வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அக்ஷய் குமார் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கத்ரீனா கைஃப்புடன் ஒரு மேடையில் நின்றுகொண்டிருந்தபோது அவரை விளையாட்டாக தள்ளிவிடுகிறார். அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியின்போது அருகே உட்கார்ந்திருந்த கரீனா கபூர் அக்ஷய்யை தள்ளிவிடுகிறார். இது அத்தனையையும் சம்பந்தப்பட்டவர்கள் ஜாலியாகவே எடுத்துக்கொண்டார்கள். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ செம ஜாலியாக இருக்காரே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X