twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்

    By Siva
    |

    சென்னை: துப்பாக்கி இந்தி ரீமேக்கான பிஸ்டலில் அக்ஷய் குமாருடன் விஜய் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார்.

    விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்ளிட்டோரை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. நீண்ட நாட்கள் கழித்து விஜய்க்கு அமைந்த பெரிய ஹிட் படம் என்றால் அது துப்பாக்கி தான். இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

    இந்தியில் காஜல் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சோனாக்ஷிக்காவது கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

    பிஸ்டலில் அக்ஷய் குமாருடன் ஆடும் விஜய்

    பிஸ்டலில் அக்ஷய் குமாருடன் ஆடும் விஜய்

    பிஸ்டல் படத்தில் விஜய் அக்ஷய் குமாருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.

    ரவுடி ராத்தோரில் அக்கியுடன் ஆடிய விஜய்

    ரவுடி ராத்தோரில் அக்கியுடன் ஆடிய விஜய்

    பிரபுதேவா இயக்கிய ரவுடி ராத்தோர் படத்தில் விஜய் அக்ஷய் குமாருடன் ஒரு பாடலில் சில ஸ்டெப்கள் போட்டிருப்பார். அதற்கே அக்கி ஆடிவிட்டார்.

    அக்கியின் ராசியான நடிகர் விஜய்?

    அக்கியின் ராசியான நடிகர் விஜய்?

    ஏற்கனவே விஜய் ஒரு பாட்டுக்கு வந்து போன ரவுடி ராத்தோர் ஹிட்டானது. இந்நிலையில் பிஸ்டலிலும் அவர் ஆடவிருக்கிறார். அப்படி என்றால் இந்த படமும் ஹிட் தானா?

    English summary
    Buzz is that actor Vijay is going to shake his legs with Akshay Kumar in the hindi remake of Thuppaki.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X