வைரலாகும் அக்ஷய்குமாரின் மகள் ஒர்க்அவுட் வீடியோ
Recommended Video

மும்பை: நடிகர் அக்ஷய்குமாரின் மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிறது.
நடிகர் அக்ஷய்குமாருக்கு பாலிவுட் போல தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக 2.0 படத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம்.

தற்போது அக்ஷய்குமாரின் மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அவரின் மகள் நிதாரா குமார் உடற்பயிற்சி செய்ய அக்ஷய் வழிகாட்டுகிறார்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அக்ஷய்குமார், குழந்தைகள் பார்க்கும் விஷயத்தை செய்ய விரும்புவார்கள். சீக்கிரமாக துவங்குங்கள். நல்ல எடுத்துகாட்டாக இருக்கட்டும். பிள்ளை வளர்ப்பு சிறப்பானது. ஆக்டிவான குழந்தைகள் என ட்வீட் செய்துள்ளார். கடந்த 10ஆம் தேதி பதிவிட்ட வீடியோ தற்போது அதிகமாக பகிரப்படுகிறது.
அக்ஷய்குமார் மிகச்சிறப்பாக குடும்பத்தை கவனித்துக் கொள்ளக்கூடியவர் என அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











