இந்த ஆண்டுல தியேட்டர்ல வெளியாக இருக்குற அக்ஷய் குமாரோட படம்... எகிறும் எதிர்பார்ப்பு

மும்பை : பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெல்பாட்டம்.

கொரோனா லாக்டவுன் சமயத்திலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் வரும் 27ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படத்தின் நாயகன் அக்ஷய் குமார் அறிவித்துள்ளார்.

வாணி கபூர் நாயகி

வாணி கபூர் நாயகி

அக்ஷய் குமார் மற்றும் வாணி கபூர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பெல்பாட்டம். த்ரில்லர் படமாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித் எம் திவாரி. படத்தின் திரைக்கதையை அசீம் அரோரா மற்றும் பர்வீஸ் சையிக் மேற்கொண்டுள்ளனர்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

கொரோனா லாக்டவுன் சமயத்திலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்த படத்தை எடுத்து முடித்துள்ளது படக்குழு. பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு யூகங்கள் பாலிவுட்டில் உலவி வந்த நிலையில், தற்போது வரும் 27ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படத்தின் நாயகன் அக்ஷய் அறிவித்துள்ளார். படத்தின் ரிலீசுக்காக அமைதியாக காத்திருந்த ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அக்ஷய் ரசிகர்கள் உற்சாகம்

அக்ஷய் ரசிகர்கள் உற்சாகம்

இதில் முக்கியமான ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயம் என்னவென்றால் படம் வரும் 27ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள அக்ஷயின் முதல் படம் இதுவாகும். இதுகுறித்து அக்ஷய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

மீட்டெடுக்கும் முயற்சி

மீட்டெடுக்கும் முயற்சி

80களில் நடைபெறும் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செயலிழந்து காணப்படும் வெள்ளித்திரையை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X