ஹீரோ .. ஹீரோ ..
வெறும் கோவணத்துடன் வந்தார், பல படங்களில் சட்டையை கழற்றிவிட்டு வந்தார்... இப்போது எதுவும் இல்லாமல் வருகிறார் கமல். என்னபுரியவில்லையா?
கமல்ஹாசனின் அடுத்த அவதாரம் "பிறந்த நாள் உடையில். கலைப்புலி தாணுவின் ஆளவந்தான் படத்திற்காகவே இந்த புதுமைக் கோலம்.
கேரக்டருக்கேற்ப தன்னை செதுக்கிக் கொள்வது கமலின் பழக்கம்.16 வயதினிலே படத்திற்காக வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக, ஒரு முழக்கோவணத்துடன் வந்தார்.
கல்யாண ராமனுக்காக தெத்துப் பல்லுடன் வந்தார். அபூர்வ சகோதரர்களுக்காக குட்டையானார். அவ்வை சண்முகியில் சேலை கட்டினார். இப்போதுஆளவந்தானுக்காக உடலில் எந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
ஆளவந்தானில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் இவரது ஜோடி ரவீனா தாண்டன். படத்திற்காக உடல் எடையை 25 கிலோஅதிகரித்துள்ளார்.
அதெல்லாம் சரி!. பிறந்த நாள் உடையுடன் கமலை தரிசிக்க நமக்கு சென்சார் போர்டு வாய்ப்பு தருமா?


Click it and Unblock the Notifications











