For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹீரோ .. ஹீரோ ..

  By Staff
  |

  * ஆளவந்தான் கதையை உருவாக்கிய போது, இதை கே.பாலச்சந்தர் தான் டைரக்ட்செய்ய வேண்டும் என்ற எண்ணம் கமலுக்கு இருந்ததாம். ஆனால், ஆக்ஷன் படம்செய்வதில் கே.பி.க்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. அதனால் "குரு செய்யவேண்டிய பணியை இப்போது அவருடைய சிஷ்யன் சுரேஷ் கிருஷ்ணா செய்கிறார்.

  இப்போதைக்கு இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லையாம். சினிமா கேமிரா நுழைந்திடாத இந்தியாவின் மூலை முடுக்குகளில் எலலாம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  டெல்லி அருகே பனியால் மூடப்பட்ட அருமையான சில குட்டி நகரங்கள்இருக்கின்றன. அந்த இடங்களை கேமிராவில் அள்ளிக் கொண்டு வந்து தமிழ்ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் கமலின் நீண்ட நாள்ஆசையாம்.

  வெளிநாடுகளை விட இந்தியாவில் அருமையான லொகேஷன்கள் இருக்கின்றன.அதை நாம் கண்டு கொள்வதே இல்லை. அவற்றை நாங்கள் உங்கள் கண் முன்னால்கொண்டு வருகிறோம் என்கிறது ஆளவந்தான் டீம்.

  * இருவர், உயிரே, சைனா கேட், சவுதாகர் (இந்தி) உட்பட ஏராளமான படங்களுக்குஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் சமீர் சந்தா. இவர் தான் ஆளவந்தானின் ஆர்ட்டைரக்டர். இவர் ஷியாம் பெனகல், மிருணாள் சென் போன்ற டைரக்டர்களுடன்பணியாற்றியவர். 1975ம் ஆண்டு ஆர்ட் டைரக்டராக காலடி எடுத்து வைத்தவர்.சிறந்த ஆர்ட் டைரக்டராக இதுவரை மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

  "வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் என்ற பாடல் மூலம் தமிழ் நெஞ்சங்களை கலக்கியவிட்டு "இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்" மூலம் உச்சத்தை அடைந்தவர் பாடகர் சங்கர் மகாதேவன். இவர் தான் ஆளவந்தான் படத்தின் இசையமைப்பாளர். இவர் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது.

  பாடகர், இசையமைப்பாளர், சாப்ட்வேர் இன்ஜினியர் என்று மகாதேவனுக்கு பலமுகங்கள். 5 வயதில் கர்நாடக சங்கீதத்தை முறையப்படி பயின்றவர். 11வது வயதில்கச்சேரிசெய்தவர். இந்தியில் இவர் இசையமைத்த "மிஷன் காஷ்மீர் படம் தீபாவளிக்குதிரைக்கு வருகிறது.

  முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தமிழில் வாய்ப்பு தந்து விட்டார் கமல்.கே.வி.மகாதேவனுக்கு பிறகு தமிழ் திரையுலகம் சந்திக்கப் போகும் சங்கர்மகாதேவனை வாழ்த்துவோம்.

  சாதனை அணியின் ஆள வந்தான்...

  எதையும் ஒழுங்கா செய்யணும்; புதுமையாச் செய்யணும் என்ற உருப்படியானகொள்கையை லட்சியமாகக் கொண்டவர் தானே கமல். தாணு என்ற மிகப் பெரியபிரம்மாண்டத்தையும், சுரேஷ் கிருஷ்ணா என்ற கற்பனை குறையாத அட்சயபாத்திரத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்டு, காதல், கத்தரிக்காய் என்றிருக்கும்தமிழ் சினிமாவையே புரட்டிப் போடும் ஒரு புதிய பிரம்மாஸ்திரத்துடன் களம்இறங்கியுள்ளார்.

  இந்த சாதனை அணி எழுதப் போகும் புதிய சரித்திரம் பற்றி அவர்களே சொன்னதகவல்:

  சுரேஷ் கிருஷ்ணா கூறுகிறார்:

  தெனாலி படப்பிடிப்பில் இருந்தபோது இந்த கதையை சொன்னார் கமல். கேட்டபோதேஇதில் ஒரு ஸ்பார்க் இருப்பதை உணர முடிந்தது. இதுவொரு ஹைடெக் படம். படத்தில்25 நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள். ஆஸ்திரேலியாவின் "கட்டிங் எட்ஜ் என்றநிறுவனத்தினர் இந்த கிராபிக்ஸ் காட்சிகளை அசத்தலாக செய்து கொண்டிருக்கின்றனர்.

  ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாவும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிராண்ட் பேஜூம்சேர்ந்து இந்த படத்திற்கு ஸ்டன்ட் அமைக்கின்றனர். மேட் மேக்ஸ், ஜாக்கிசானின்மிஸ்டர் நைஸ் கை, சமீபத்தில் வெளியான எம்.ஐ.2 போன்ற அதிரடி ஆக்ஷன்படங்களுக்கு சண்டை அமைத்தவர் இந்த கிராண்ட் பேஜ்.

  கமல்ஹாசன் கூறுகையில்,

  ஆளவந்தான் என்ற பெயரை கேட்டதுமே, அப்படீன்னா என்னங்க?ன்னு தான் முதல்கேள்வி கேக்கிறாங்க. ஆளவந்தாங்கறது ஒரு கதாபாத்திரத்தோட பேரு அவ்வளவுதான். குழந்தைகளைக் கொஞ்சும்போது ராஜா மாதரின்னு கொஞ்சுவாங்க. அதேமாதிரிதான் ஆளவந்தார் என்கிற பேரை செல்லமா ஆளவந்தான் என்று மாத்தினோம்.

  எந்த குழந்தையுமே வாழ்க்கையில தோல்வி அடையறதில்ல. நாம பிறக்கும்போதேலட்சக்கணக்கான விந்தணுக்கள்ள ஒரே ஒரு விந்தணு தான் வெற்றிகரமா நீந்திகருவாகுது. அப்போ ஆரம்பிக்கிற வெற்றி ஒருத்தனோட வாழ்க்கை பூரா தொடருது.தோக்கறதுக்காக யாருமே பிறக்கறதில்ல. இதுதான் ஆளவந்தானோட கதை.

  நான் 17 வருசத்திற்கு முன்பு எழுதின தாயம் என்கிற நாவலை லேசாகத் தழுவியதுதான்ஆளவந்தான். ஆனா, அந்த கதையை மனசுல நினைச்சுகிட்டு படத்தை பாத்தீங்கன்னாநிச்சயம் ஏமாந்துபோவீங்க.

  ஹே ராம்க்கு நினைத்த வெற்றி கிடைக்கலை. அதனால ஆளவந்தானுக்காக ரத்தம்சுண்டி வியர்வையா வெளியில வர்ற அளவுக்கு உழைக்கிறோம். அப்படி உழைச்சாத்தான் வெற்றி கிடைக்கும்.

  கமலுக்கு ஜோடியாக ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, அம்மா அப்பாவாகசரத்பாபு, பாத்திமா பாபுவும் நடிக்கின்றனர்.

  கலைப்புலி தாணு கூறுகையில்,

  என்னுடைய தயாரிப்பு தான் என்றாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துபார்த்து செய்கிறார் கமல். இந்த படம் மிகப் பெரிய அளவில் பேசப்படுவது நிச்சயம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X