»   »  அண்ணாமலை, அருணாசலம், லிங்கா, கபாலி... (மறுபடியும்) சிவனிடம் சரணடைந்த ரஜினி

அண்ணாமலை, அருணாசலம், லிங்கா, கபாலி... (மறுபடியும்) சிவனிடம் சரணடைந்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் நினைவாகவே தான் நடித்த திரைப்படங்களுக்கு அண்ணாமலை என்றும் அருணாச்சலம் என்றும் படம் வைத்தார். சிவனின் பெயரை நினைவு படுத்தும் வகையில் தனது முந்தைய படத்திற்கு லிங்கா என்று பெயர் வைத்த ரஜினி இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி' என்ற படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் படத்திற்கு அண்ணாமலை என்று பெயர் சூட்டப்பட்ட உடன் அண்ணாமலைக்கு அரோகரா என்று எதிர்மறையான கருத்துக்கள் கிளம்பினாலும் ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிகமுக்கியமான திருப்புமுனையாக அமைந்த படம் அண்ணாமலை.


இதனையடுத்து சில திரைப்படங்கள் நடித்த ரஜினிகாந்த் மீண்டும் தனது திரைப்படத்திற்கு அருணாச்சலம் என்று பெயர் வைக்க இந்த படமும் வெற்றிப்படமானது.


ரஞ்சித் இயக்கத்தில் கபாலி

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி

அட்டகத்தி, மெட்ராஸ்' படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘கபாலி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.


அதிகாரப்பூர்வ வெளியீடு

அதிகாரப்பூர்வ வெளியீடு

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அந்தப் படத்தின் பெயரை பவர்ஃபுல்லாக அமைவது வழக்கம். எந்தப் பெயரை வைத்தாலும் அதன் பின் அந்தப் பெயர் பரபரப்பாகப் பேசப்படும். இப்போது கபாலி படமும் பரபரப்பாக பேசப்படுகிறது.


லி பட வரிசை

லி பட வரிசை

பாலி பலி, புலி, பாயும் புலி, தெனாலி, என லி என்ற எழுத்தில் முடியும் படங்களின் வரிசையில் கபாலி என்று பெயர் சூட்டியுள்ளனர். கபாலி என்பது சிவனின் பெயர் மயிலாப்பூர் கபாலீஸ்வரரை கபாலி என்று சுருக்கமாக பக்தர்கள் அழைப்பார்கள். இந்த பெயரை கபாலி என்று சூட்டியுள்ளார் இயக்குநர் ரஞ்சித் என்கின்றனர் சிலர்.


கபாலி கான்

ரஜினி பட அறிவிப்பு வெளியான உடன் வழக்கமாக தங்களின் சேட்டையை ஆரம்பித்து விட்டனர் வடிவேலு நடித்த படத்தை மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர்.


டைட்டில் மாறுமோ?

கபாலி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் இருப்பதால் இந்த படத்தில் தலைப்பு மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர் சிலர்.


English summary
Like his earlier movies, Super star Rajinikanth has once again has got the name in Shiva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil