இந்தி வழியாக தமிழுக்குத் தாவிய அகில் ஐயர்!
இந்தியில் கிடைத்த அறிமுகத்தால் அந்த மொழியில் அதிக வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ள புதுமுக இளம் நடிகர் அகில் ஐயருக்கு.
லெகர் ஹம் தீவானா தில் படம்தான் அகிலின் முதல் படம். இந்த இந்திப் படத்தால் தற்போது கோலிவுட்டுக்கு வருகிறார் அகில் ஐயர்.
தற்போது தமிழில் 2 புதிய படங்களில் புக் ஆகியுள்ளாராம் அகில்.

இருவர் ஒன்றானால்
ஜி. அன்பு இயக்கும் இருவர் ஒன்றானால் அதில் ஒரு படம். இன்னொரு படம் நிஜமா நிழலா. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். சமீபத்தில் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.

நாடகத்தில் பட்டை தீட்டி
தனது நடிப்பை நாடகங்களில் நடித்து பட்டை தீட்டியுள்ளார். சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது நடிப்பில் முழுத் தகுதியுடன் கூடிய நடிகராக உயர்ந்திருக்கிறார்.

ரொமான்டிக் காமெடி
அகில் நடிக்கும் இருவர் ஒன்றானால் முழு நீள ரொமான்டிக் காமெடியாம். இப்படத்தில் அவருக்கு இரு நாயகர்களில் ஒரு நாயகன் ரோல். முக்கியப் பாத்திரங்களில் கிருத்திகா மாலினி மற்றும் பி.ஆர். பிரபு நடிக்கிறார்கள்.

ஆப் பீட் திரில்லர்
அதேசமயம் நிஜமா நிழலா படம் ஆப் பீட் படம். திரில்லர் கதையாம். கோலிவுட்டில் முத்திரை பதிக்க காத்திருக்கிறார் அகில்....!
களம் அகில் வசமாகட்டும்...!


Click it and Unblock the Notifications











