twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”இனிமே நான் கெட்டவன் இல்லை.. ரொம்ப நல்லவன்” சிம்புவின் ரெட்கார்டை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம்!

    |

    சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சிம்புவுக்கு எதிராக விதித்திருந்த ரெட்கார்டு தடையை நீக்கி உள்ளது.

    தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    கையில் குழந்தையுடன் நயன்தாரா.. அருகிலேயே விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் போட்டோ!கையில் குழந்தையுடன் நயன்தாரா.. அருகிலேயே விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் போட்டோ!

    இந்நிலையில் சுமூக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூச்சுவிட சிரமப்படும் 6 மாத குழந்தை... அரிய வகை நோயால் பாதிப்பு - உதவுங்கள் ப்ளீஸ்

    சிம்பு மீது புகார்கள்

    சிம்பு மீது புகார்கள்

    நேரத்திற்கு சரியாக படப்பிடிப்பு தளங்களுக்கு வருவதில்லை, தயாரிப்பாளர் பணத்தை வீணடிக்கிறார், அட்வான்ஸ் வாங்கி விட்டு அந்த படத்தில் நடிக்க மறுப்பது என ஏகப்பட்ட புகார்கள் நடிகர் சிம்பு மீது அடுக்கடுக்காக பாயவே தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முன் வந்தது.

    மைக்கேல் ராயப்பன் புகார்

    மைக்கேல் ராயப்பன் புகார்

    சிம்பு நடிப்பில் வெளியான AAA படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிம்புவின் அலட்சியம் மற்றும் ஷூட்டிங்கிற்கு வர அவர் செய்த தாமதங்கள் தான் படத்தின் தோல்விக்கே காரணம் என ஒட்டுமொத்த பழியையும் சிம்பு மீது போட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் பெரிய புகாரை முன் வைத்தார்.

    சிம்புவுக்கு சிக்கல்

    சிம்புவுக்கு சிக்கல்

    மைக்கேல் ராயப்பனின் புகாரை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. நடிகர் சிம்புவின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் மைக்கேல் ராயப்பனுக்கு 2.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவு போடப்பட்டது.

    லிங்குசாமி தயாரிப்பில்

    லிங்குசாமி தயாரிப்பில்

    இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் நடிகர் சிம்பு ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி விட்டு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்கிற புகாரை லிங்குசாமியும் தயாரிப்பு சங்கத்திடம் வைக்க, பி.டி. செல்வகுமார் தயாரிப்பிலும் அட்வான்ஸ் வாங்கி விட்டு சிம்பு நடிக்க மறுத்ததாக புகார்கள் எழவே அவர் மீது ரெட் கார்டு போடப்பட்டது.

    ஃபெஃப்சி பங்கேற்கக் கூடாது

    ஃபெஃப்சி பங்கேற்கக் கூடாது

    நடிகர் சிம்பு நடிக்கும் படங்களில் ஃபெஃப்சி (FEFSI) ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்கிற உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.

    சிம்புவிடம் மாற்றம்

    சிம்புவிடம் மாற்றம்

    தன் மீது வைக்கப்பட்ட புகார்களை எல்லாம் சரி செய்யும் விதமாக ஆளே முற்றிலுமாக மாறி இருக்கிறார் நடிகர் சிம்பு. தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து பல படங்களை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் ரெட் கார்டை நீக்க வேண்டும் என அவரது அம்மாவும் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தடை நீக்கம்

    தடை நீக்கம்

    சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளங்களுக்கு வருவது, குறித்த நேரத்தில் படத்தை முடித்துக் கொடுப்பது என நடிகர் சிம்பு முன்பு மாதிரி இல்லாமல் டோட்டலாக மாறி விட்டார். வாங்கிய அட்வான்ஸ்களை திருப்பி தருவது அல்லது அவர்களின் படங்களில் நடிப்பது உள்ளிட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்த நிலையில், நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட தடையை நீக்கி இருக்கிறது.

    மூன்று படங்கள்

    மூன்று படங்கள்

    மின்னல் வேகத்தில் படங்களை முடித்துக் கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. மேலும், ஒரே நேரத்தில் மூன்று படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கெளதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கும் பத்து தல, வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் என அடுத்தடுத்து சிம்பு சினிமாவில் கடும் உழைப்பை கொட்டி வருவதை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    மாநாடு ரிலீசுக்கு

    மாநாடு ரிலீசுக்கு

    ஹன்சிகா உடன் மஹா மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மாநாடு உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தியேட்டரில் தெறிக்க விட சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பேக் டு பேக் பல படங்களை கொடுத்து மீண்டும் தனது இடத்தை சிம்பு தடைகளை உடைத்து பிடிப்பார் என்பது நிச்சயம்.

    English summary
    All Problems solved; Producer council cancels Simbu’s red card and Vendhu Thanindhathu Kaadu movie shooting started.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X