கழுகு கை, மர்ம லுக்.. அல்லு அர்ஜூனின் ‘ராக்கா’.. மிரண்டு போன ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் அட்லீ இணைந்து இருக்கும் புதிய படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இப்படம் தற்காலிகமாக 'AA22xA6' என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனின் 44வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, 'AA22xA6' இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு 11 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டு இருந்தது. அதன்படி சற்று முன் படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படத்திற்கு 'ராக்கா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன்: AA22xA6' படத்தின் அறிவிப்பு போஸ்டரில், பெரிய நகங்களுடன் ஒரு மர்மமான கை இருப்பதை பார்த்து, படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதில், அல்லு அர்ஜூனி கண் மட்டும் தெரிய, அவரின் கை கழுகின் கை போல, நீண்ட நகத்துடன் இருப்பதால், இப்படம் ஒரு ஃபான்டஸி அல்லது புராண கதையை மையமாகக் கொண்டிருக்கலாம் கூறப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில்: இயக்குனர் அட்லீ இயக்கும் இந்த படம், பரலல் யூனிவர்ஸ் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது. பல அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், அதிக அளவில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அல்லு அர்ஜுன் multiple roles நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சாய் அபைக்கர் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது. பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரும் இப்படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ராக்கா படம் அடுத்த ஆண்டு தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











