அது உண்மைதாங்க... அவருக்கும் விஜய் சேதுபதி வில்லன்தானாம்... கன்பர்ம் பண்ணினார் ஹீரோ
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் வில்லனாக நடிப்பது உண்மைதான் என்று பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.
கதை பிடித்திருந்தால் கேரக்டர் பற்றி யோசிக்காமல் கால்ஷூட் கொடுப்பவர் விஜய் சேதுபதி. அவர் இப்போது, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மலையாளத்தில் மார்கோனி மத்தாய் என்ற படத்தில் நடித்தார்.

லால் சிங் சத்தா
தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன்
அடுத்து, பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

பூஜா ஹெக்டே
அல்லு அர்ஜுன் இப்போது, அல வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாகிறது.

வில்லன்
இதையடுத்து சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இதில்தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அல வைகுந்தபுரம்லோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதை அல்லு அர்ஜூன் உறுதிப்படுத்தினார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications