இன்ஸ்டாவில் 13 மில்லியன் பாலோவர்ஸ்… அல்லு அர்ஜுனுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரசிகர் படை !
சென்னை : தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 13மில்லியனை கடந்துள்ளது.
இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் அல்லு அர்ஜுன் .
தெலுங்கு திரைத்துறையில் மட்டுமின்றி தமிழகத்திலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹிட்டடித்த பாடல்
அல்லு அர்ஜுன் இறுதியாக நடித்த ஆல வைகுண்டபுரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த வெற்றிப்பெற்ற பாடலாக உள்ளது. அந்த ஒரே பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் அல்லு அர்ஜுன் . இதனால் இவரின் சமூகவலைதளப் பக்கத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இப்போது 13 மில்லியனைக் கடந்துள்ளது. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த சாதனையைப் படைத்ததில்லை.

5 மொழிகளில்
அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா வெளியாக இருக்கிறது.

புஷ்பா இரண்டுபாகங்களாக
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக படப்பிடிப்பு தாமதமானதால் படம் வெளியாவது தள்ளிப்போனது.

கடத்தல்காரனாக
செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தில் புட்டபொம்மா நடன இயக்குனர் ஜானி ஒரு பாடலுக்கு நடனமைத்துள்ளார்.
Recommended Video

மிரட்டல் வில்லனாக
புஷ்பா பகத் பாசிலின் முதல் தெலுங்குப் படம். இப்போது பகத் பாசிலின் வில்லன் தோற்றத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், அவர், மொட்டைத் தலை, அதில் வெட்டுத் தழும்பு என மிரட்டலான கெட்டப்பில் இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியில் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.


Click it and Unblock the Notifications











