தாடி பிரச்சனை டாடி வரை போயிடுச்சே.. புஷ்பா 2 படம் வெளிவராதா?.. அல்லு அர்ஜுன் அப்பா திடீர் முடிவு?

ஹைதராபாத்: இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டும் படமாக அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 இருக்கும் என எதிர்பார்கப்பட்டு வரும் நிலையில், அந்த படம் வெளிவருமா? என்கிற கேள்வியும் குழப்பங்களும் எழுந்துள்ளன. இந்த ஆண்டு மலையாள சினிமா முதல் பாதியில் பல படங்களின் கூட்டு முயற்சியால் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை பாக்ஸ் ஆபிஸ் அள்ளியது.

தெலுங்கு திரையுலகம் இந்த ஆண்டு சங்கராந்திக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்களை வெளியிட்டது. மகேஷ் பாபு படம் 200 கோடி + வசூலும் ஹனுமான் திரைப்படம் இந்தி பெல்ட்டிலும் ஓடி 300 கோடி + வசூலும் ஈட்டியது.

pushpa 2 allu arjun allu aravind 2

ஆரம்பமே 500 கோடி என ஆரம்பித்த டோலிவுட்டுக்கு கல்கி 2898 ஏடி திரைப்படம் மட்டுமே 1000 கோடி பெஞ்ச் மார்க் வசூலை ஈட்டித் தந்தது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படமும் 1000 கோடிக்கும் மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தை சுற்றி கிளம்பியுள்ள சர்ச்சை பெரும் சந்தேகத்தை கிளப்பியது. இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் முடிவுக்கு அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

ஸ்டைலிஷ் ஸ்டார்: டோலிவுட்டில் பல வாரிசு நடிகர்கள் தெலுங்கு திரையுலக ரசிகர்களை ஆட்சி செய்து வருகின்றனர்.பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனான அல்லு அர்ஜுன் பல வெற்றிப் படங்களை கொடுத்து தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருகிறார். அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பாலிவுட் ரசிகர்கள் வரை கவர்ந்தது. அடுத்து அவர் நடித்து வெளியான புஷ்பா திரைப்படமும் இந்தியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

புஷ்பா 2: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் 2ம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்க அதிக பட்ஜெட்டில் படத்தை சுகுமார் எடுத்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு பெரும் சிக்கலில் உள்ளதாக கூறுகின்றனர்.

pushpa 2 allu arjun allu aravind 2

அல்லு அர்ஜுன் அப்பா முடிவு: அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே ஈகோ கிளாஷ் வெடித்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், அல்லு அர்ஜுன் வெளிநாட்டுக்கு ட்ரிம் பண்ண தாடியுடன் பறந்து சென்ற விமான காட்சிகள் வெளியான நிலையில், புஷ்பா 2 படமே வெளிவராதா? என்கிற கேள்விகளும் கிளம்பின. இந்நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பிற்பகல் 3 மணியளவில் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் பிரஸ் மீட் ஒன்றை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன சொல்லப் போகிறார்?: புஷ்பா 2 படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என அல்லு அரவிந்த் சொல்வாரா? அல்லது புஷ்பா 2 படத்துக்கும் அல்லு அர்ஜுனுக்கும் சம்பந்தமே இல்லை என்பாரா? என்கிற அச்சமும் எழுகிறது. அல்லு அர்ஜுனே ஒரு சின்ன போஸ்ட் இன்ஸ்டாவில் போட்டாலே இந்த பிரச்சனை முடிந்து விடுமே இதற்கு எதற்கு அவருடைய அப்பா பிரஸ் மீட் வைக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அல்லு அர்ஜுன் அடுத்ததாக திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். முன்னதாக அட்லீ, நெல்சன் பெயர்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X