தேசிய விருது மட்டுமில்லை.. இன்னொரு நாட்டு விருதும் வென்ற அல்லு அர்ஜுன்.. உண்மையில் வைல்டு ஃபயர்தான்

ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் உலகளவில் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக படம் கொஞ்சம் சொதப்பினாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. 1500 கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் வசூலித்திருந்தது. அடுத்ததாக அவர் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்னொரு பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படம் மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே படம் நல்ல ஹிட்தான். முக்கியமாக உலகளவில் அந்தப் படம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் கைது: புஷ்பா இப்படி வசூலில் சக்கைப்போடு போட்டாலும்; அந்தப் படத்தின் ரிலீஸ்போது பிரச்னையும் வெடித்தது. அதாவது, படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்கு ஹைதராபாத்தில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்தார். அதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்; சிறுவன் ஒருவன் கோமாவுக்கு சென்றான். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்கள் சிறையில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது ரசிகர்களும், தெலுங்கு திரையுலகினரும் ஒன்று திரண்டனர். அதேசமயம் அல்லு அர்ஜுன் ஒன்றும் கிட்னியையோ, கண்ணையோ இழக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் திரைத்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குறித்தும், கோமாவுக்கு சென்ற சிறுவன் குறித்தும் எதற்காக பேசவே இல்லை என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். இப்படி அல்லு அர்ஜுனை சுற்றி அந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து நின்றது.

Allu Arjun Got Qatar Government Movie Award for Pushpa 2

ரசிகர்கள் முழு சப்போர்ட்: ஆனால் அல்லுவுக்கு ஆதரவாகவும், அரணாகவும் அவரது ரசிகர்களும் நின்றார்கள். விடுதலையானபோது அவரது வீட்டுக்கு முன்பு அவ்வளவு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தை பார்த்து அவர் உச்சக்கட்ட எமோஷனலாகவும் ஆனார். சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு தற்காலிகமாக, AA22xA6 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படமானது சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. சமீபத்தில்தான் அதுதொடர்பான வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன், அட்லீ, கலாநிதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள். கண்டிப்பாக இந்தப் படம் வசூலில் இமாலய சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு படக்குழுவிடமும், திரைத்துறையிலும் ஓரளவுக்கு இருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் இன்னொரு பெருமையை பெற்றிருக்கிறார்.

விருது வென்ற அல்லு அர்ஜுன்: அவர், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு பெருமையை பெற்றிருக்கிறார். அந்த விருது என்பது, கத்தார் அரசால் வழங்கப்படுவதாகும். தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றிருக்கிறார். ஏற்கனவே புஷ்பா படத்துக்காக அவர் தேசிய விருதினையும் பெற்றிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X